(Reading time: 22 - 44 minutes)

NAU

“எப்பொழுதோ வரும் இங்கேயே இப்படி இருக்கே, மால்டிவ்ஸ்ல் எப்படி இருக்கும் உங்க அறை?” இந்தரிடம் கேட்டாள் பூஜா........

“நம்ம அறை” திருத்தினான் இந்தர்........

“சரி நம்ம அறை”......... 

“அதை அங்கு வரும் பொழுது பார்ப்பாய். இரண்டிலும் ஒரு ஒற்றுமை மட்டும் இருக்கும். அது இந்த கவுச். அதில் படுத்தால் எப்பொழுதும் கனவு கன்னியுடன் கூடிய கனவு தான், ஸ்வீட் மெமரிஸ்.”

“என்னது கனவு கன்னியா? யார் அது? என்று முறைத்தாள் பூஜா.......

“கனவில் இப்படி எல்லாம் முறைக்கமாட்டீங்க கனவு கன்னி மேடம்” என குறும்புடன் புன்னகைதான் இந்தர்.

அதை கேட்டு பூஜாவின் உதட்டிலும்  புன்னகை மலர்ந்தது. “இந்த புன்னகை தான் என் கனவிலும் மூணு வருஷமா பாடா படுத்துது. சோ, அதுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்” என கேட்டவாறு அவளை நெருங்கினான் இந்தர்.

இந்தரின் நெருக்கம்,  அவளின்,  இதயத்தை மட்டும் சுவிஸ் பனியில் வைத்து உறைய செய்தது போல் உணர்ந்தாள் பூஜா, மூச்சு கூட விட முடியவில்லை. நகர்ந்து செல்லவும் கால்கள் ஒத்துழைக்கவில்லை.

அந்நேரம் இந்தரின் கைபேசியின் அழைப்பு மெல்லிய இசை அந்த அறையை நிறைத்தது.” கனவில் உன்னை தொட முடியாது, நேரிலாவதுன்னு பார்த்தா,” என்ற படி பெரு மூச்சு விட்டான் இந்தர். பூஜாவிற்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது. இந்தர் போனை எடுத்த பொழுது .......

“இந்தர் கண்ணா, அவங்க கிளம்பனுமாம், நீங்க இரண்டு பேரும் கீழ வரீங்களா? என சம்யுக்தா கேட்டார்.

 “யா மா. இதோ வந்துட்டோம்........ என்றபடி போனை அணைத்தான் இந்தர்.

பூஜாவை பார்த்த பொழுது, அவளது கன்னம் நாணத்தால் சிவந்து இருந்தது. “என்ன பூஜா இது, நான் ஒன்னும் செய்யாமலேயே இப்படி இருக்கு? இப்படியே கீழே போனால், நான் எதோ உன்னை செய்துட்டேன்னு உங்க அக்கா சொல்ல போறாங்க” என்றான்.

“இந்தர்................, என்ற பொழுது அவளது குரல் முழுவது வெளி வராமல் ஹஸ்கி வாய்சில் வெளிவந்தது.

“நீ இப்படி ஹஸ்கி வாய்சில் பேசினால், நாம கீழே போற மூடே வராது போல் இருக்கே”

“நான் ஒன்னும் ஹஸ்கி வாய்ஸில் பேசல, உங்களால தான் எனக்கு குரலே வெளி வரல”

“நான் என்னடா பண்ணேன்? மாய கண்ணனின் குறும்புடன் கேட்டான் இந்தர்.

“நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா அவ்வளவு தான், நான் இன்னைக்கு வீட்டிற்கு போனது போல் தான். அத்தை வேற கீழே கூப்பிட்டாங்க வாங்க”

“சரி வா, நான் என் அத்தையிடம் கேட்கிறேன், இன்னைக்கு நீ  இங்கு தங்க சம்மதம், நமக்கும் ஒரு முன்னோட்டம் பார்த்தது போல் இருக்கும்” என்றான்.

“நீங்க இப்படியே பேசிட்டு இருங்க, நான் கிளம்பறேன்.” என்றாள் புன்னகைத்தபடி ............

இருவரும் சிரித்தபடி , படிகளில் இறங்கி வருவதை பார்த்து, சம்யுக்தாவும், சரோஜினியும்,  ஆனந்தப்பட்டனர். என்ன இருந்தாலும் அம்மாக்களுக்கே இருக்கும் தனி குணம் அது. பிள்ளைகள் ஆனந்தமே தனது ஆனந்தம் என நினைப்பவர்கள்.

“இந்தர் கண்ணா, ஆடி பதினெட்டு அன்று பூ வைக்கும் விழா வைத்து கொள்ளலாம்ன்னு முடிவு செய்திருக்கோம், உனக்கு ஒகே தான? என கேட்டார் சம்யுக்தா..........

“எனக்கு ஓகே மா........ என்று சம்யுக்தாவிடம் கூறி விட்டு, சரோஜினியை தனியே அழைத்து சென்று இரண்டு நிமிடம், எதோ பேசினான், நடுநடுவே பூஜாவை பார்த்து கண்சிமிட்டி கொண்டே.........

பூஜாவிற்கு தான் படபடப்பாக இருந்தது. என்னத்தை பேசறான் அம்மாவிடம், சும்மாவே அம்மா கொஞ்சம் கண்டிப்பு. இந்தரை  பற்றி ஏதும் தவறாக நினைத்து விட கூடாதே என்று இருந்தது பூஜாவிற்கு.  மனதிற்குள் சாமி ஸ்லோகம் எல்லாம் சொல்லிக் கொண்டாள்.

இருவரும் பேசி முடித்து வந்த பொழுது சரோஜினி , பீஷ்மரிடம் “சரி நாம கிளம்பலாம். பூஜா இன்று இங்க தங்கட்டும்”  என கூறியதை கேட்டு

நோ............ என்ற பூஜாவின் அலறக்கு முன்,  ஷ்யமளாவின் “நோ............ கேட்டது சத்தமாக..........

“அம்மா, என்னமா இது” என்று அம்மாவை கேட்டபடி இந்தரை பார்த்தாள் சியாமளா. அவன் குறும்புடன் சிரித்து கொண்டிருந்தான்.

“நீ ஏன் இப்போ அலர்ற? மாப்பிளை கேட்டார், அதற்கு எப்படி முடியாதுன்னு சொல்றது?

“மா......... கல்யாணத்திற்கு முன்னால் எப்படிமா?.........

“எனக்கு தெரியாதா அதை பற்றி, கல்யாணத்திற்கு முன் மாப்பிள்ளையும், பெண்ணும் ஒரே இடத்தில தங்க கூடாதுன்னு?

“அப்புறம் எப்படி மா............ என சியாமளா கேட்க, பூஜாவும் கேள்வியுடன் நோக்கினாள் தன் தாயை. என்ன சொல்லி அம்மாவிடம் சம்மதம் வாங்கி இருப்பான்? கேள்வி மண்டையை பிளந்தது இருவருக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.