(Reading time: 11 - 21 minutes)

“ஒரு டாக்டரா தெரியுது, ஆனா ஒரு அப்பாவா மனசு வலிக்க தான் செய்யுது டாக்டர்” என பதில் கூறினார் துரை.......

அந்த டாக்டரும், இன்று இரவு இங்கு இருக்கட்டும், ட்ரிப்ஸ் முடிந்த பின் காலையில் அழைத்து செல்லுங்கள் என கூறி கிளம்பி சென்றார்.

 பூஜா தான் அதிகமாக அழுது கொண்டிருந்தாள். டாக்டர் வந்து ஜனனி நார்மலா இருக்கா என்று கூறிய பின் தான் கொஞ்சம் தெளிந்தாள்.

உள்ளே சென்று பார்த்த பொழுது ஜனனி தூங்கி கொண்டு தான் இருந்தாள். அந்த பிஞ்சு கைகளில் ட்ரிப்ஸ் ஏறி கொண்டு இருந்தது.

இந்தர் ஒன்றும் பேசாமல் ஓரமாக நின்று கொண்டிருந்தான். பீஷ்மர் அவனிடம் வந்து “சாரி மாப்பிள்ளை, நீங்க உங்க வீட்டிலேயே இருக்கேன்னு சொன்னிங்க, நான் தான் எதோ சொல்லி, இப்படி ஆகி போச்சு.” என கூறி வருத்தப்பட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா, நாங்க அங்க இருந்திருந்தாலும் வந்திருப்போம்.” என கூறி சமாதானப் படுத்தினான்.

துரை அவர்களிடம் வந்து “நீங்க எல்லாம் வீட்டுக்கு கிளம்புங்க, நானும் ஷியாமளாவும் இங்கு இருக்கோம்.” என கூறினார்.......

இந்தர், திரும்பி பூஜாவை பார்த்த பொழுது அவள் கண்களில் உடனே கண்ணீர் துளிர்த்தது. “ப்ளீஸ் இந்தர், நான் ஜானு கண் விழிக்கும் வரை அவளுடன் இருக்கேனே, “ என்று ஒரு பரிதாப பார்வை பார்த்தாள்.

“சரிடா, என கூறி பீஷ்மருடன் கிளம்பினான் இந்தர்.

அங்கிருந்த கவுச்சில் பூஜாவும், சியாமளாவும் அமர, இருந்த ஒற்றை நாற்காலியில் துரை அமர்ந்தார்.......  சிறுது நேரம் பேசி கொண்டிருந்த பின், ஷியமளாவிர்க்கு தூக்கம் வர அவளை அங்கே படுக்க சொல்லி விட்டு, வெளியே வந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தாள் பூஜா....... சிறிது நேரத்தில் தூக்கம் வர, கண்ணயர்ந்து தூங்கி தலை சாய்ந்த பொழுது,வசதியான தோள்கள் இருந்தன தாங்கி கொள்ள......... சட்டென விழித்து பார்த்த பொழுது அங்கு இந்தர் இருந்தான் பக்கத்து சேரில்.

“நீங்க வீடுக்கு போகலையா? என கண் சுருக்கி கேட்ட பொழுது......

“மாமாவை வீட்டில் விட்டுட்டு வந்துட்டேன் டா.......

“சாரி ஜித்து, உங்களை ரொம்ப கஷ்ட படுத்துறேனா?

“நீ இப்படி கேட்பது தான் கஷ்டமா இருக்குடா. சரி நீ இப்படியே என் தோளில் சாய்ந்து கொஞ்ச நேரம் தூங்கு” என கூறினான்.

“ஹையோ, எனக்கு கொஞ்சம் வெட்கமா இருக்கே  ஜித்து, அப்படி உங்க மேல சாய்ந்து கொள்ள”

“இதுக்கேவாடா, அப்போ உனக்கு நிறைய பாடம் எடுக்கணுமோ?

“ப்ளீஸ் ஜித்து, இது ஹாஸ்பிடல்ன்னால அப்படி சொன்னேன்.” என கன்னம் சிவக்க கூறினாள்.

“அப்போ வீட்டில்ன்னா ஓகே வா, நான் பயந்தே போயட்டேன்டா. எங்க உனக்கு அரிச்சுவடியில் இருந்து ஆரம்பிக்கனுமோன்னு.”

“ஜித்து ப்ளீஸ், ஏன் இன்னைக்கு இப்படியெல்லாம் பேசறிங்க?

“அது சரி, இன்னைக்கு இப்படி பேசிட்டா இருப்பது, செயல்ல இறங்க வேண்டிய நேரம் தான்” என குறும்பாக கூறினான் இந்தர்.

விட்டால் அவன் இப்படி பேசிக்கொண்டே இருப்பான் என்று அவனுக்கு பதில் கூறாமல் அவன் தோளில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் பூஜா.

“இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டியா பூஜா? ரொம்ப ஜனனியை நினைத்து பயந்து போய் இருந்தடா, அவளுக்கு ஒன்றும் இல்லை. இப்போ ஓகே வா உனக்கு.”

“ம்ம், ஆனா, நாளைக்கு அவள் கண் விழித்து, சித்தின்னு கூப்பிட்டால் தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.

“அது ஓகே டா, இப்போ கொஞ்சம் நேரம் கண் மூடி ஓய்வெடு.” என கூறி அவள் தலையை தன் தோள் மீது சாய்த்து கொண்டான்.

காலையில் அம்மா என்ற படி ஜனனி செல்லம் எழுந்ததும் தான் சியாமளாவிற்கு   நிம்மதி வந்தது.

உடனே சியாமளா வெளியில் பூஜாவை அழைக்க வந்த பொழுது, பூஜா அழகாக, இந்தரின் தோளில் தலை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்தாள். இருவரையும் அப்படி பார்த்தது, கொஞ்சம் வருத்தமாகவும், கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இப்படி நல்ல நாளில் இங்கு வந்து இப்படி உறங்கி கொண்டு இருக்கிறார்களே என்று வருத்தமாகவும், பூஜாவிற்காக இங்கு வந்து, எந்த சூழ்நிலையிலும் அவளை விட்டு கொடுக்காமல் இருக்கும் இந்தரை பார்த்து, தன் தங்கை கொடுத்து வைத்தவள் தான் என்று எண்ணி மகிழ்ச்சியும் அடைந்தாள் சியாமளா............

NAU

நாமும் அங்கே அவர்களோடு...

Episode 14

Episode 16

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.