(Reading time: 10 - 19 minutes)

16. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

னைவரும் கிளம்பி வீட்டை அடைந்த பொழுது, அனைவரையும் வாசலிலேயே நிற்க வைத்து, டிரைவர் மூலமாக ஒரு பெரிய பூசணி காயை சுற்ற வைத்து வாசலில் உடைக்க செய்தார்  சரோஜினி.......

“கல்யாண வீட்டில் உங்க அனைவருக்கும் திருஷ்டி பட்டு விட்டது. அதனால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது”, என கூறி வருந்தினார்.

“வருத்த படாதிங்க அத்தை, அதான் எல்லா திருஷ்டியும் கழித்து விட்டீர்களே” என கூறிய இந்தர் அந்த டிரைவரை அழைத்து, “சிறிது நேரம் கழித்து அந்த உடைத்த  பூசணியை எடுத்து குப்பையில் போட்டு விடும்படி கூறி வந்தான்.

அனைவரும் அவரவர் அறைக்கு சென்று, குளித்து உடை மாற்றி கிளம்பினர். சரோஜினி டிபன் சாப்பிட அழைக்க……..

“இந்தர் சாப்பிட போலாமா, அம்மா கூப்பிடறாங்க” என்றபடி அவன் அருகில் வந்தாள் பூஜா........

“போலாம், அதுக்கு முன்னால் எனக்கு ஒரு ம்ம் கொடு அப்புறம் போலாம்.”

“அது என்ன ம்ம்” என பூஜா விழிகளை விரிக்க.........

“ம்ம், அப்படின்னா முத்தம் ன்னு அர்ததம்.”

“ஹையோ, அதுக்கு ஏன் இப்படி ஒரு சுருக்கம்.” என்று கேட்டபடி வெட்கி சிவந்தாள் பூஜா.........

“நாம பேசி கொண்டிருக்கும் பொழுது யாராவது கேட்டால் , அவங்களுக்கு ஒன்றும் புரியாது, அதுக்கு தான்.”

“அதுக்கு ஏன் ம்ம்? “கே” ன்னு கூட வச்சு இருக்கலாமே”

“முத்தம்ன்னு, சொல்லும் போது  தான் உதடு இணையும். கிஸ்ஸுன்னு சொல்லிப் பார் உதடு இணையாது.” என கூறி புன்னைகைதான் இந்தர்.....

“போதும், உங்க ஆராய்ச்சி,  இப்படியெல்லமா யோசிப்பாங்க?” என வெட்கத்துடன் பூஜா கேட்க........

“ஹேய், நேத்து சின்ன பையன் என்னை, ரூம் எல்லாம் அலங்கரிச்சு, ஆசை காட்டி ஏமாத்திட்டு, யோசிச்சியான்னா கேட்கற? உன்னை” என்றபடி அவள் அருகே நெருங்கி, அவளை சுவருடன் சாய்த்து, அவள் முகம் நோக்கி குனிந்த பொழுது, அவனை தள்ளி விட்டு ஓடினாள் பூஜா.

“பூஜா நில் என்று இந்தர் கூறியவுடன், நின்று திரும்பினாள் பூஜா, கண்களில் குறும்புடன் என்ன என பார்வையால் கேட்டபடி.

“நான் குடுத்ததை நீ வாங்கி கொள்ளவில்லை, அதனால் நீ வந்து ஒரு ம்ம் கொடுத்துட்டு போ” என கூறினான்.

“இங்கு கொடுப்பதும் கிடையாது, எடுப்பதும் கிடையாது.” என பூஜா கூறி குறும்புடன் கண் சிமிட்ட.......

“சரி, நீயா கொடுக்கும் வரை, எதுவும் உனக்கும் கிடைக்காது.” என கூறியபடி அவளை தாண்டி முன்னே நடந்தான் இந்தர்..........

விறு விறுவென்று நடந்து படிகளில் இறங்க ஆரம்பித்தான் இந்தர். அவன் பின்னால் ஓடி வந்த பூஜா மேல் படியில் நின்று, அவன் தோள்களை பற்றி பின் புறமாக இழுத்து, அவன் கன்னத்தில் தன் உதட்டை பதித்தாள். இந்தரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அதை பார்க்க வெட்கி, அவனை கடந்து, நகர்ந்து படிகளில் இறங்கி ஓடி சமயலறையில் புகுந்து கொண்டாள்.

இந்தர் ஹாலில் வந்து அமர்ந்து அங்கிருந்த பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பித்தான். அதற்குள் ஜனனி ஓடி வந்து அவன் மடியில் ஏறி அமர்ந்து “சித்தப்பா, நீங்க எனக்கு நேத்து பெட் டைம் ஸ்டோரி சொல்றேன்னு, என்னை ஏமாத்திட்டீங்க” என இந்தரிடம் வந்து கொஞ்சினாள்.

“நீங்க தான் தூங்கிடீன்களே டா செல்லம்.” என பதிலுக்கு கொஞ்சினான்.

அப்பொழுது மறு வீடு அழைத்து செல்ல என்று இந்தர் வீட்டு ஆட்கள் அங்கு வந்தனர்.

முன் தினம் நடந்ததை அறியாத சம்யுக்தா, “இந்தர் கண்ணா நம்ம குல தெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்பா” என கூறினார்.

“மா, அது எதோ பக்கத்தில் இருப்பது போல் சொல்றிங்க, அது மதுரை பக்கத்தில் இருக்கு.”

“அமாம் இந்தர் கண்ணா, அதனால் என்ன அப்பா எல்லா ஏற்பாடுகளையும் செய்துட்டார். மதுரைக்கு எல்லோரும் விமானத்தில் சென்று அங்கிருந்து காரில் செல்ல எல்லாம் பதிவு செய்தாச்சு. இன்று போய் அங்கு ஒரு நாள் தங்கி சாமி கும்பிட்டு, நாளை திரும்பி விடலாம்.”  என இந்தரின் கஷ்டம் அறியாமல், அவரது திட்டங்களை கூறி கொண்டிருந்தார்.

“மா, ரெண்டு நாளில் நாம் மால்டிவ்ஸ் கிளம்பனும், அங்க ரிஷப்ஷன் ஏற்பாடு எல்லாம் நடந்து கொண்டிருக்கு, இதில் இந்த பயணம் அவசியமா?” என கேட்டான் இந்தர்.

இந்தருக்கு அவ்வளவாக கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவுள் நமக்குள் தான் இருக்கிறான், நாம் உண்மையாக நடந்து கொண்டாலே போதும் என நினைப்பவன். அதனாலேயே, சம்யுக்தா இந்த கோவில் பயணத்தை அவனிடம் கூறாமல் அவரே அணைத்து ஏற்பாடுகளையும் கவனித்து கொண்டார்.

பூஜா வீட்டு ஆட்களையும் அழைத்தார் சம்யுக்தா. ஜனனியும் நன்றாக இருப்பதால், அனைவரும்  மதிய விமானத்தில் கிளம்பி மதுரையை அடைந்து, அங்கிருந்து நான்கு கார்களில் கிளம்பினர். மதுரையிலிருந்து இரண்டு மணிநேர பயணம். வேம்பார்- அந்த ஊரின் பெயர். சிறிய கிராமமாக இருந்தது. கடற்கரையை ஒட்டி அமைந்து இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.