(Reading time: 21 - 41 minutes)

14. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

மூன்று மாதம் கழித்து திருமணத்திற்கு நாள் குறித்து இருந்ததால், அனைவரும் அவரவர் இடம் திரும்பினர்.

சம்யுக்தா மட்டும் சென்னையில் தங்கி திருமண வேலைகளை ஆரம்பித்தார். சித்தி சுஜியும் சுவிஸ் செல்லாமல் அவருடன் தங்கி,  வரிசை தட்டுகள் வாங்குவது, திருமணதிற்கு என்பதால் 51 தட்டுக்கள் வைப்பதால், வெறும் வெள்ளி தாம்பாளங்கள் மட்டும் பத்தாது என்பதால், மற்ற தட்டுக்கள் எங்கு கிடைக்கும் என்று நெட்டில் தேடி, விலாசம் அறிந்து நேரில் சென்று முக்கியமான சேலை, நகை தவிர மற்ற அனைத்து தட்டுகளையும் ஆர்டர் கொடுத்து வந்தனர். அவர்களே அழகாக அடுக்கி மண்டபத்துக்கே கொண்டு வந்து தந்து விடுவார்கள்.

போனில் பேசும் போது இந்தர் தான் இருவரையும் திட்டி கொண்டிருந்தான். எல்லா வேலையையும் இவன்ட் மேனேஜ்மென்ட் ஆட்களிடம் விட்டாலே அவர்கள் அழகாக செய்வார்கள் என்று.

ஆனால் சகோதரிகள் இருவரும் ஒத்து கொள்ளவில்லை. வீட்டில் நடக்கவிருக்கும் ஒரே திருமணம், அனைத்தையும் நாமே செய்தால், நன்றாக இருக்கும் என கூறிவிட்டனர்.

சேலை எடுக்க காஞ்சிபுரம் போகும் நாள் அன்று மட்டும் பூஜா வீட்டில் அவர்களையும் அழைத்து இருந்தனர்.

சரோஜினி அவருக்கு வேறு வேலை இருபதாக கூறி, பூஜாவையும் ஷியமளாவையும் மட்டும் அனுப்பி வைத்தார். காரில் அவர்கள் நால்வருக்கும் , டிரைவருக்கும்  மட்டும் இடம் இருந்ததால் சம்யுக்தாவும், அதிகம் சரோஜினியை வற்புறுத்தவில்லை.

முன் இருக்கையில் சித்தி சுஜி அமர்ந்து கொள்ள, பின் இருக்கையில் நடுவில் பூஜாவும் மற்ற இருவரும் ஓரத்திலும் அமர்ந்து கொண்டனர். வண்டி கிளம்பியவுடன், சுஜி திரும்பி அமர்ந்து கொண்டார் பேச ஏதுவாக....

“என்னம்மா மருமகளே, சுவிஸ்க்கெல்லாம், வந்திருக்க, வீட்டுக்கு வந்திருக்கலாம் இல்ல” என ஆரம்பித்தார் சுஜி...........

“அடுத்த முறை கண்டிப்பா வர்றேன் சின்ன அத்தை” பூஜா சங்கடத்துடன் கூறினாள்.

“அது, இப்போ சின்ன அத்தைன்னு சொல்லி என்னை  கவுத்துட்ட, அதனால் உன்னை மன்னித்து விட்டேன். அது எப்படி இரண்டு பேரும், இவ்வளவு வருசம் எங்களிடம் சொல்லாம இருந்திங்க?

“என்னிடம் கூட சொல்லல, சின்ன அத்தை” என குறுக்கே புகுந்தாள் சியாமளா..........

”அப்படி எல்லாம் சொல்ற மாதிரி எதுவும், அப்ப இல்லை அத்தை.” என பம்மினாள் பூஜா, அப்புறம் சின்ன மாமியார் ஆச்சே.........

“உங்க போட்டோஸ் பார்த்தா அப்படி தெரியலையே!!!!!!!!!!

“அது வெறும் ப்ரன்ட்ஸா எடுத்து கொண்ட போட்டோஸ் அத்தை.

“பாரு நான், சியாமளா எல்லாம் நல்லா பேசற டைப்பா இருக்கோம், நீ உங்க அத்தை மாதிரி இருக்க. எங்கக்காவும் ரொம்ப பேச மாட்டா உன்னை மாதிரி. தீவுக்கு நடுவிலேயே வாழ்ந்து பேச்சே குறைந்து போச்சு. ஆனா காரியத்தில் கண்ண இருப்பா.”

“நீங்க எப்படி சுவிஸ் மலை மேல இருந்தும் இப்படி பேசறிங்க சின்ன அத்தை? என ஷ்யாமளா கேட்க........

“நமக்காக தானே skype, whatapp எல்லாம் கண்டு பிடிச்சு விட்டு இருக்காங்க, ப்ரீயா எல்லோரோடும் ஒரே அரட்டை தான். அப்புறம் ஒவ்வொரு தடவையும் சின்ன அத்தைன்னு நீட்டி முழங்க வேண்டாம். சுஜிமான்னு கூப்பிடுங்க போதும்” என சொல்லிக் கொண்டே வெளியில் பார்த்தவர்,

“என்ன சிங்காரம், காஞ்சிபுரத்துக்கு காரில் தானே போகணும், நீ எங்களை ப்ளைட்டில் அனுப்ப போறியா? இங்க ஏர்போர்ட் வந்துட்ட” .......

“இல்லை மேடம், சார் முதலில் இங்க தான் வர சொன்னார்.” என கூறிய படி ஏர்போர்ட் உள்ளே சென்று, காரை நிறுத்தி வண்டியில் இருந்து இறங்கினான்.

“அது எந்த சார்? என சுஜி கேட்க

“இந்த(ர்) சாரே தான்” என்றபடி ஓட்டுனர் இருக்கையில் ஏறினான் இந்தர்.

“வாடா காதல் மன்னா, எத்தனை முறை, நானும் உங்கம்மாவும் காஞ்சிபுரம் சென்றிருப்போம், அப்போ எல்லாம் கூப்ட்டாலும் வராம, இப்போ கூபிடாமலே வந்து நிக்கற.”

“சித்தி அப்போ எல்லாம் நீங்க, அப்பாவையும் , சித்தப்பாவையும் தான் கூப்பிட்டு இருக்கணும். சோ என் மேல் தப்பு கிடையாது.” என்றபடி ரெவ்யு மிர்ரரை பூஜாவை பார்க்கும்படி திருப்பி, காரை கிளப்பினான்.

“முதல்ல காரை நிப்பாட்டு” அலறினார் சுஜி.........

“என்ன ஆச்சு” என்றபடி காரை கிளப்பாமல் நிறுத்தினான்.

“நீ இப்படி கண்ணாடியை எல்லாம் திருப்பி, பின்னால பூஜாவை பார்த்துட்டு வந்தா, நாம சேலை கடைக்கு போன மாதிரி தான்.” என்ற படி காரை விட்டு இறங்கி பூஜாவை முன் இருக்கைக்கு மாற்றினார்.

“இதுக்கு தான் சித்தி வேணுங்கறது.” என ஐஸ் வைத்தான் சித்திக்கு........

“போதுண்டா உன் பாராட்டு, இல்லன்னா கொஞ்ச நேரத்தில் நீயே இப்படி இருக்கை மாற்ற சொல்லுவ, அதான் நானே சொன்னேன்” சித்தி அலுத்து கொண்டார்........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.