(Reading time: 21 - 41 minutes)

பேசிக் கொண்டே காஞ்சிபுரம் வந்து அடைந்தனர். முதலில் அங்குள்ள கோவில்களுக்கு சென்று விட்டு பின் அங்கிருந்த பிரபல பட்டு சேலை கடைக்கு சென்றனர்.

“இந்தர் கண்ணா நீயே, பூஜாவுக்கு புடவை தேர்ந்தெடு” என சம்யுக்தா கூறிய பொழுது,.........

“இல்லன்னா மட்டும் உன் கண்ணன் உன்னை தேர்ந்தெடுக்க விட்டுடுவானா என்ன? நடுவே புகுந்தார் சுஜி..........

“ஹே....... நாங்க எல்லாம் தாய் சொல்லை தட்டாதே டைப்பு. உங்களை மாதிரின்னு நெனைச்சிங்களா? க்ரான்மா சொல்லி இருக்காங்க. நீங்க கொஞ்சம் கூட அவங்க பேச்சை கேட்க மாட்டிங்கன்னு.” என இந்தரும் பதிலுக்கு பதில் கொடுத்தான்.........

“உன் கூட பேசி ஜெயிக்க முடியுமா டா.......... முதலில் நம்ம அம்மாவை  சொல்லணும், நம்மை பத்தி சின்ன பசங்க கிட்ட எல்லாம் குறை சொல்லி வச்சு இருக்காங்க” என சம்யுவிடம் புலம்பினார் சுஜி..........

“நம்மை பற்றின்னு ஏன் எங்கம்மாவை சேர்த்துக்கரிங்க !!!!!!   எங்கம்மாவை பற்றி எல்லாம், நிறைவா தான் சொல்லி இருக்காங்க, க்ராண்ட்மா எப்பவும் சரியா தான் சொல்லுவாங்க” என இந்தரும் பதில் கொடுத்தான்.

“இரு, உன்னோட சின்ன வயசு சேட்டை பற்றி எல்லாம் நான் பூஜா கிட்ட சொன்றேன். என்னையேவா” என சுஜி, இந்தரை மிரட்ட ஆரம்பித்தார்......

“நீங்க சொல்ல போற எல்லாவற்றையும், சொல்லி தான் நான் அவளை இம்ப்ரஸ் செய்தேன். அதனால் நோ ப்ராப்ளம்.”.............  என இந்தர் இந்த பாலிலும் சிக்சர் அடித்தான்.........

“நீங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பித்தா, முடிக்கமாட்டிங்க”,என கூறி விட்டு பூஜாவிடம் திரும்பி, ” பூஜா நீயும் இந்தரும், உனக்கு நாலு சேலை  தேர்ந்தெடுங்க, முகூர்த்த புடவை, துணை பட்டு, நிச்சய சேலை, தலை முழுக்கு சேலை , என தேர்ந்த்டுங்க. நாங்க சொந்தகாரங்களுக்கு கொடுக்க வேண்டிய புடவைகளை தேர்வு செய்யறோம்.” என கூறி சுஜியையும், ஷியமளாவியும் கிப்ட் சேலை செக்க்ஷனுக்கு அழைத்து சென்றார்.

“உங்க குறும்பை பற்றி எல்லாம் உங்க சித்தியிடம் ஒருநாள் கேட்டு தெரிஞ்சுக்கறேன்” என பூஜா கூற

“அப்படி எதுவுமே இருக்காது, அதனால் தான் அவங்க இப்படி அடிக்கடி மிரட்டிக்கிட்டே இருப்பாங்க. ஆனால்  இனிமே உன்னிடம் செய்ய போற குறும்பை பற்றி வேணா உன்னிடம் சொல்றேன்.” என குறும்பாக கண் சிமிட்டி நகைத்தான் இந்தர்...........

அதை கேட்டு நாணத்தால் சிவந்த கன்னத்தை மறைத்து , “நாம வந்த வேலையை பார்க்கலாம்”, என கூறி சேலை பார்க்க ஆரம்பித்தாள் பூஜா.....

NAU

ஒரு வழியாக சேலை அனைத்தையும் வாங்கி டிக்கி முழுவதும் அடுக்கினர்.

திரும்பும் வழியில் இந்தர் ஏர்போர்டில் இறங்கி கொண்டான்.  மற்றவர் வீடு திரும்பினர்.

அடுத்து அழைப்பிதழ் தேர்வு செய்ய சகோதரிகள் நினைத்த பொழுது, இந்தர் போனில் “அம்மா நான் கார்ட் தேர்வு செய்துட்டேன், நீங்க உள்ளே என்ன அச்சிடுவது என்பதை மட்டும் அங்கு சொல்லி விடுங்கள் என்று ஒரு முகவரியை கொடுத்தான்.

அங்கு சென்ற பொழுது கல்யாணத்திற்கு சொந்தகளுக்கு ஒன்று, பிசினஸ் ஆட்களுக்கு ஒன்று , மூன்றாவதாக மால்டிவ்ஸ் ல் நடக்க இருக்கும் ரிஷப்ஷனுக்கு ஒன்று தேர்வு செய்து இருந்தான்.  மூன்றிலுமே அழைப்பு இதழை  திறந்தவுடன், தமிழிலும், ஆங்கிலத்திலுமாக, “அனைவரும் இனிதே வருக வருக” என்ற வரியுடன்,  மங்கள இசை ஒலிப்பது போன்று அமைந்து இருந்தது.

இருவருக்கும் அழைப்பிதழ் மிகவும் பிடித்து இருந்தது. உறவினர் அழைபிதழில் அச்சிட மட்டும் இவர்கள் கொடுக்க வேண்டி இருந்தது. மற்ற இரண்டிற்கும் இந்தரே ஆங்கிலத்தில் படிவத்தை அனுப்பி இருந்தான்.

அடுத்து தாலிக்கு பவுன் உருக்கி விடும் நிகழ்ச்சி உறவினர்களை அழைத்து நடந்தேறியது. அதற்கு மணப்பெண்ணை அழைக்க மாட்டார்கள் என்பதால், இந்தரும் வரவில்லை. அவ்விழாவிற்க்கு வந்த அர்ஜுன், உறவினருக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியையும் முடித்தே திரும்பினார்.

திருமணமும் நெருங்கியது. நம் முறை திருமண நிகழ்வுகளான, நலங்கு, பந்தக்கால் நடுதல், நிச்சயம், கல்யாணம், தலை முழுக்கு, என்றும் வட நாட்டு பாணியில்  மெஹந்தி, சங்கீத், என்றும், இவை அனைத்தும் முடிந்ததும் மால்டிவ்ஸ் ல் வரவேற்ப்பும் இருந்தது. இவை அனைத்திற்கும் உடை வாங்கவே இருமுறை இந்தர் வந்து சென்றான். இந்தரை விட அதிகம் உடை வாங்கியது அர்ஜுனாக இருந்தார்.

இதில் பெண்களை பற்றி கேட்கவா வேண்டும். சேலை எடுத்த விலைக்கு ஜாக்கெட்டை, அலங்கரித்து,  தைக்க விலை கொடுத்தனர்.

டுத்து நகை கடைக்கு சென்று நிச்சயதன்று பூஜாவிற்கு போட வைர ஆரமும், இரண்டு வைர வளையலும், வீட்டின் முக்கிய பெண்கள் பூஜாவுக்கு போட்டு விட  16 தங்க வளையலும் வாங்கினர். இவை தவிர வீட்டிற்க்கு முதல் முறை வரும் பொழுது, போட என்று மாமியார் மோதிரமும், வைர மோதிரமாகவே வாங்கினர்.........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.