(Reading time: 21 - 41 minutes)

மூன்றே வினாடி அவளை கண்டாலே

நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள்

அவளை பார்த்த எல்லோரும்

மூன்றே வினாடி அவளை கண்டாலே

நெஞ்சை தாக்கும் மின்சாரம்

மூச்சு விடும் ரோஜா பூ

பார்த்ததில்லை யாரும்தான்

அவளை வந்து பார்த்தாலே

அந்த குறை தீரும்தான்

இந்தர் பாடி முடித்ததும் கை தட்டலோடு  ஒன்ஸ் மோர் என்ற குரலும் ஒலித்தது.

சந்தோஷத்தில் தன்னை மறந்து கை தட்ட போன குழலியை, கையை தடுத்து அவளது மருதாணி கோலத்தை காப்பாற்றியது அபி தான்.

“நன்றி அபி” என்ற போது லேசாக வெட்கபட்டாலும், அவன் கையை விடாமல், அவளின் வெட்கி சிவந்த முகத்தையே பார்த்திருந்ததால், வெட்க முகதிலிருந்து, கோப முகத்திற்கு மாறினாள் குழலி.

“ஹலோ, கொஞ்சம் கையை விடறிங்களா” குழலி கிண்டலாக கூறினாள்.

“போதும்மா கிண்டல், எதோ உன் அழகில் மயங்கி நிக்கற மாதிரி கனவா? கொஞ்சம் முழிச்சுக்கோ, எங்கே கை தட்டி என்னோட ஷர்ட்ட கரையாக்கிட போறன்னு பிடிச்சா, மேடம் ஓவரா முறைக்கறீங்க!!!!!!!   அபியும் பதிலுக்கு முறைத்தான்...........

அங்கு பூஜாவோ  பாட்டை கேட்டு வெட்கத்தில் முகம் சிவந்திருந்தாள், அதை தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த இந்தரும் ரசித்து கொண்டிருந்தான். பார்த்து கொண்டிருந்த போதே பூஜாவின் முகம் சிறிது மாறுவதை கண்டு டக்கென்று அவள் அருகே சென்றான்.

“என்னடா ஏதாவது வேணுமா? என்று கேட்டபடி அவள் அருகே வந்து அமர்ந்தான் இந்தர்..........

கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும், அப்படி அவன் அக்கறையுடன் வந்து கேட்டது நன்றாகவே இருந்தது பூஜாவிற்கு.

“குடிக்க கொஞ்சம் தண்ணீர் மட்டும் வேண்டும்” என பூஜா கேட்டு முடிக்கவும் இருந்த இடத்தில இருந்தே கண் அசைவில் தண்ணிர் வரவழைத்தான். வந்த சிறு தண்ணிர் குடுவையை திறந்து அவள் வாயிலும் புகட்டினான்.

“ப்ளீஸ் இந்தர், நீங்க வேண்டாம், இங்க அண்ணி யாரவது கொடுப்பாங்க, அப்புறம் எல்லோரும் ரொம்ப கிண்டல் செய்வாங்க”.......  பூஜா சொல்லி முடிக்கு முன் இளைஞர் பட்டாளம் அவர்களை சூழ்ந்தது..........

“ஹே”  என்ற கோஷத்துடன் அவர்களை சுற்றி வளைத்து “இந்தர் தான் கொடுக்கணும்” என்று குரல் கொடுத்தனர்.

புன்னகையுடன் பூஜா முகத்தை பார்த்த இந்தர், அவளது பரிதாப பார்வையால் மனம் இறங்கி, “ சரி நானே கொடுக்கிறேன், ஆனா நீங்க எல்லோரும் கண்ணை மூடுங்க” என கூற

“அப்போ எங்களுக்கு எதாவது கமிஷன் கொடுங்க அப்போ தான் கண்ணை மூடுவோம்” என கோரஸாக கத்தினர்.

“ஓகே, இன்று இரவு பேச்சுலர்ஸ் பார்ட்டி ஏற்பாடு செய்யறேன். நீங்க எல்லோரும் இங்கிருந்து கலைந்து போனா” என்று அவர்களிடம், என்ன சொன்னால் கேட்ப்பார்கள் என்று அறிந்து கூறினான் இந்தர். அதை கேட்டு இளைஞர் பட்டாளம் இருந்த இடம் தெரியாமல் உடனே மாயமாக மறைந்தனர்.

“என்னது பேச்சுலர்ஸ் பார்ட்டியா , நீங்க குடிப்பிங்களா ஜித்து”, என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டாள் பூஜா.......

“உனக்கே தெரியும் டா , நம்ம ரெண்டு பேரில் உனக்கு தான் அனுபவம் அதிகம்ன்னு.” அதை கேட்டு பூஜா அவனை முறைத்தாள்..........

“மாப்பிள்ளை சார், எங்களுக்கும் தாகமா தான் இருக்கு” என ஷியாமாளா குறும்பாக கூற

“கவலையே படாதிங்க அண்ணி, இப்பவே அண்ணாவுக்கு ஆள் அனுப்பறேன்” இந்தரும் பதில் கூறினான்.......

“அவர் வந்து நாங்க தண்ணி குடிப்பதுன்னா என் தொண்டை சகாரா பாலைவனமாவே மாறிடும். அவர் நோயாளிகளை பார்க்க போனால் வீட்டையே மறந்துடுவார்.” என ஷியாமளா கூற பெண்கள் கூட்டம் நகைத்தது.........

அதற்குள் இந்தர் விழா அமைப்பாளரை அழைத்து எதோ கூற, பத்து நிமிடத்திலெல்லாம் அனைவருக்கும் பழரசம், உறிஞ்சு குழலுடன் வந்து சேர்ந்தது.

ஒரு பழரச குவளையுடன் வந்த அபி, குழலியின் முன் வந்து அவள் குடிப்பதற்கு எதுவாக அவள் முன் ஏந்தினான். அதற்கு அவனை பார்த்து முறைத்து விட்டு டக்கென்று திரும்பிய குழலி, அங்கு யாரோ சிறுசுகள் கொண்டடி இருந்த பழரசத்தில் காலை வைத்து, வழுக்கி விழ போனாள். அவள் விழாமல் அவளை தாங்கி பிடித்த அபியின் கையிலிருந்த பழரச குவளை வானில் பறந்து சரியாக அவர்கள் இருவரின் மேல் மழையாக பொழிந்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.