(Reading time: 21 - 41 minutes)

விழுந்தது விடாமல் இருக்க, தன்னை அறியாமலே கைகளால் அபியின் தோளை சுற்றி மாலையாக்கி இருந்தாள் குழலி. கையில் மருதாணி இட்டு சற்று நேரம் ஆகி இருந்ததால், காய்ந்து இருந்த மருதாணி, இப்பொழுது பழரசத்தின் உதவியுடன் சற்று ஈரமாகி, அபியின் சட்டையை பதம் பார்த்தது.

தனது சபதம் நிறைவேறிய எண்ணமே இல்லாமல்,  “சாரி அபி” என்று பதறிய படி அவனை விட்டு விலகி நின்றாள் குழலி.........

“ப்ளஷர் இஸ் மைன்” என கூறி அபி புன்னைகைக்க

“சி , உங்களை எல்லாம், எல்லாம்”  என கூறி வார்த்தைகளை தேடி கிடைக்காமல் திரும்பி நடக்க ..........

“ஹே, என்னோட சட்டையை துவைத்து கொடு” என்ற அபியின் வார்த்தைகள் அவள் காதை அடைந்தும், திரும்பி பார்க்காமல் நடந்தாள் குழலி, திரும்பினால் எங்கே கன்னத்தின் சிவப்பு தன் எண்ணத்தை அபிக்கு காட்டி கொடுத்து விடுமோ என்று.........

ஒரு வழியாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் விழா செவ்வனே நிறைவுற்றது............

அடுத்து வந்த நாட்களில் இந்தர் பார்த்து பார்த்து செய்த ஏற்பாடுகள் அனைத்தும் செயவ்வனே நிறைவேறியது. எல்லாவற்றிற்கும் ஆட்கள் இருந்ததால், சுலபமாகமே நடந்தது.........

ல்யாண தினமும் வந்தது...........

NAU

காலையில் மணமகனும், மணமகளும் அலங்கரித்து கொண்டார்களோ இல்லையோ, உறவினர் அனைவரும் அலங்கரித்து கிளம்பவே நேரம் ஆனது.

விருந்தினர்களும் வந்த வண்ணம் இருக்க அவர்களை வரவேற்க என்று வாசலில் பெரியவர்கள் நிற்க விழாவும் துவங்கியது. இந்தர் குடும்பத்தார் பெண்கள் அனைவரும் கையில் வரிசை தட்டுகளுடன் இந்தருடன் கிளம்பி, மண்டபத்தின் மதில் சுவருக்குள்  இருந்த கோவிலுக்கு சென்று வணங்கி, திரும்பினர். அவர்கள் வாயிலை அடைந்த பொழுது வரவேற்க பூஜா வீட்டு, பெண்கள் ஆரத்தி தட்டுகளுடன் காத்திருந்தனர்.

அழகாக அலங்கரிக்க பட்டிருந்த ஆரத்தி தட்டுகளுடன் ஒவ்வொரு பெண்ணாக வந்து ஆரத்தி எடுத்தனர். ஒவ்வொருவர்க்கும் வெள்ளியில் தங்க முலாம் பூசிய சாவி கொத்தை அழகான கண்ணாடி பேழையில் வைத்து பரிசளித்தான் இந்தர். இருபத்தி ஓராவது ஆளாக வந்த சியாமளா ஆராத்தி எடுத்தவுடன் பரிசை வாங்கி கொண்டு,

“இது மட்டும் போதாது மாப்பிள்ளை சார், எங்களுக்கு ரூபாவும் கொடுக்க வேண்டும், அப்பொழுது தான் நீங்கள் உள்ளே சென்று பூஜாவை பார்க்க முடியும்” என்று கூற, ஆராத்தி எடுத்த  பெண்கள் கூட்டத்தில் இருந்த கல்யாணம் ஆகாத பெண்கள் அனைவரும்

“ஆமாம் அத்தான் எங்களுக்கு பாக்கெட் மணி தான் வேண்டும்” என கோரஸாக கூறு அவனது வழியை மறித்து நின்று கொண்டனர். இது அவர்கள் வழக்கத்தில் எப்போதும் நடப்பது தான்.

“அண்ணா, அண்ணிக்கு ஒரு போனை போட்டு வெளியே கூப்பிடுங்கள், நாம் இங்கிருந்தே அவர்களை அழைத்து செல்லலாம்” என்று அபி பதிலுக்கு குரல் கொடுத்தான்.

“எங்க அக்காவை மட்டும் வெளியே விட்டுவிடுவோமா என்ன” என்று அந்த பக்கமிருந்தும் குரல் வந்தது.

ஒரு வழியாக எல்லா தள்ளு முள்ளும் நடந்து, இந்தர், சம்யுக்தாவின் முகத்தை பார்க்க, அவர் தனது கை பையிலிருந்து ஆயிரம் ருபாய் கட்டு ஒன்றை எடுத்து இந்தரிடம் கொடுக்க, அவன் அதை சியாமளாவின் ஆரத்தி தட்டில் வைத்தான். அதை பார்த்த பெண்கள் பட்டாளம் ஒ வென கத்தியபடி வழி விட்டனர்.

அடுத்து பீஷ்மர் வந்து இந்தருக்கு மாலை அணிவித்தார். அடுத்து செல்லத்துரை இந்தரின் கைகளில், தங்க காப்பு அணிவித்து, அவரை உள்ளே அழைத்து சென்றார்.

மணமகன் மேடையில் அமர்ந்திருக்க, மணமகளுக்கு, வரிசை தட்டிலிருந்த புடவையை அணிவித்து மேடைக்கு அழைத்து வந்தனர். ஓரக்கண்ணால் இந்தரை பார்த்த பொழுது, அவன் அவளை தான் வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான். அதை பார்த்து பூஜா வெட்கத்தால் தலை குனிந்து கொண்டாள்.

மேடையில் மணமகனும், மணமகளும் அமர்ந்திருக்க முக்கிய சொந்தங்கள் அனைவரும் அவர்களுக்கு பின் நிற்க குடும்பத்தில் மூத்த ஒருவர், மணமக்கள் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று அறிவுரை கூறி பொன்னாலான மங்கல நானை எடுத்து இந்தர் கையில் கொடுக்க அதனை பூஜாவின் கழுத்தில் அணிவித்தான் இந்தர்.

அனைவரும், பூவும் அட்சதையும் சேர்ந்த கலவையை மணமக்கள் மேல்  தூவி வாழ்த்தினர். மற்ற சடங்குகளும் முடிந்ததும், விருந்தினர் ஒவ்வொருவராக மேடை ஏறி மணமக்களை வாழ்த்தினர்.

மதியம் சாப்பிடும் இடத்தில் விருந்தினர் ஓரளவிற்கு கிளம்பிய பின் மணமக்கள் உணவருந்த வந்த பொழுது இளைஞர் பட்டாளம் கூடி அவர்களை கிண்டலடித்து, ஒருவர் இல்லை இனிப்பை அடுத்தவர் இலைக்கு மாற்றி, இனிப்பை ஒருவருக்கொருவர் ஊட்டிவிடும்படி, நச்சரித்து கொண்டிருந்தனர்.

பூஜா வெட்கத்தில் நெளிந்து கொண்டிருந்தாள். இந்தர் பாதம் கட்லியில் ஒரு துண்டை, விண்டு அவளுக்கு ஊட்டிவிட்டான்.

அண்ணி, அண்ணி என்று அடுத்து கூச்சல் கிளம்பியது.

பூஜா வெட்கத்தால் பேசாமல் இருக்க இந்தர் தான் கூறினான்.....

“பூஜா ஒரு துண்டு எடுத்து கொடுத்துடு, இல்லன்னா உன்னை விடவே மாட்டங்க” என இந்தர் கூற கைகள் நடுங்க பூஜாவும் அவனுக்கு ஊட்டி விட்டாள்.

இனிதே அனைத்தும் முடிந்து இந்தரின் வீடு வந்து சேர்ந்தனர்.

NAU

நாமும் அங்கே அவர்களோடு...

Episode 13

Episode 15

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.