Chillzee.in misaraga sangini super hero contest

Chillzee.in மிசரக சங்கினி சூப்பர் ஹீரோ போட்டி முடிவு!

பிரென்ட்ஸ்,  தமிழ் தென்றலின் புதிய தொடர்கதை “மிசரக சங்கினி” யின் சூப்பர் ஹீரோக்கு பெயர் தேர்வு செய்ய உதவுங்கன்னு உங்களை கேட்டிருந்தோம்.

அந்த அழைப்பை ஏற்று போட்டியில் கலந்து உதவிய அனைவருக்கும் எங்களின் நன்றிகள் 🙋🙋🙋🙋

நீங்கள் பகிர்ந்த ஆலோசனைகளில் இருந்து தமிழ் தென்றல் தேர்வு செய்த ஆலோசனை பற்றிய விபரங்கள் இதோ


தையின் கருவை அடுத்து சூப்பர் ஹீரோ சுலபமாக மனதில் உதித்துவிட்டார்.  ஆனால் அவருடைய பெயரும், உடையும் அத்தனை சுலபமாயிருக்கவில்லை.  என்ன செய்வது என்று யோசித்த போது தான் உங்களிடம் கேட்கலாம் என்ற கிரேட் ஐடியா தோன்றியது.  சில்சீ டீமிடம் இது குறித்து கேட்கலாமா வேண்டாமா என்ற இரு நாள் தயக்கத்திற்கு பிறகு தான் மெயில் அனுப்பினேன்.  டீமிடமிருந்து இத்தனை நேர்மறையான அணுகுமுறையும், ஊட்டமும் கிடைத்தது மகிழ்ச்சி என்றால் சூப்பர் ஹீரோ காண்டெஸ்ட் பேரதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி 🙂🙂🙂 நன்றி சில்சீ 🙂🙂🙂

விதவிதமான ஐடியாக்களையும் பெயர்களையும் அனுப்பி போட்டியில் பங்கெடுத்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙂🙂🙂

சிறு வயது முதல் பங்கெடுத்த பெருபான்மையான போட்டிகளில் தோல்வியுற்றே பழக்கப்பட்ட நான் போட்டியில் பங்கெடுத்து என்ன நடக்க போகிறது என்று சலித்து போயிருந்தேன்.  போட்டியின் வெற்றியே பங்கெடுப்போர்களின் ஆர்வத்தில் தான் என்பதை இப்போட்டியில் பங்கெடுத்த அத்தனை போட்டியாளர்களும் எனக்கு புரியவைத்துள்ளீர்கள்.  பங்கெடுப்பின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுத்த உங்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றிகள் 🙂🙂🙂     

பெயர்:

ரிந்துரைக்கப்பட்ட சுமார் 50 பெயர்களில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சற்று சவாலான காரியமாக இருந்தது.  இருப்பினும் போட்டியை முன்னிட்டு ஷிவானியின் “மாருத வேகன்” கதையின் கரு மற்றும் நாயகனின் சக்திக்கு மிக பொருந்தியிருப்பதாக தோன்றவும் இப்பெயரை தேர்ந்தெடுக்கிறேன்.  நன்றி ஷிவானி!

ஆடையமைப்பு:

நம் சூப்பர் ஹீரோவின் சக்தியின் மூலத்தை சரியாக கணித்து, கதையின் தலைப்பையும் கருத்தில் வைத்து இவ்விரண்டின் அடிப்படையில் உடலை கவ்விய மினுமினுக்கும் தங்கம் அல்லது வெண்மை நிற ஆடையை சசிரேகா பரிந்துரைத்திருக்கிறார். கதைக்கு மிகவும் பொருந்தும் வகையில் இவ்வாடையமைப்பு இருப்பதால் இதை மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுக்கிறேன். நன்றி சசிரேகா!

எங்கு திறைமையை கண்டாலும் அதை பாராட்டுவது மிக அவசியம்.  இல்லையேல் அத்திறமை அழிந்து போகும் வாய்ப்புண்டு என்பது என்னுடைய கருத்து.  ஆதலால் இதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.  

தலைப்பின் கீழ் சசிரேகாவின் ரீசெர்ச் வர்க் அருமை.  இரண்டு பக்க அளவில் அவரின் புரிதலையும் அதற்கு பொருத்தமான பரிந்துரைகளும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.  A pat on your back Sasi 🙂🙂🙂

கூடிய விரைவில் மிசரக சங்கினியின் முதல் அத்தியாயத்தில் உங்களை சந்திக்க ஆவலோடு காத்திருக்கும் மாருத வேகன் 🙂

 


வாழ்த்துக்கள் ஷிவானி & சசிரேகா 👏👏👏. உங்கள் இருவருக்கும் பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப் படும்.

வாழ்த்துக்கள் தமிழ் தென்றல்! உங்கள் கதையை படிக்க அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் 👍👍👍.

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எங்களின் நன்றிகள் 🙏🙏🙏

 

{jcomments on}

{kunena_discuss:1215}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.