Chillzee.in misaraga sangini super hero contest

Chillzee.in மிசரக சங்கினி சூப்பர் ஹீரோ போட்டி!

இந்த போட்டி நிறைவுப் பெற்றுவிட்டது! போட்டி முடிவை தெரிந்துக் கொள்ள Chillzee.in மிசரக சங்கினி சூப்பர் ஹீரோ போட்டி முடிவு! பக்கம் செல்லுங்கள்.

மீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருக்கும் தமிழ் தென்றலின் புதிய தொடர்கதை “மிசரக சங்கினி” யின் சூப்பர் ஹீரோக்கு பெயர் தேர்வு செய்ய உதவுங்க பிரென்ட்ஸ் 🙋🙋🙋🙋

மிசரக சங்கினி

ஹாலிவுட்டில் அதிகமாகவும் பாலிவுட்டில் ஓரிரு சூப்பர் ஹீரோக்களையும் பார்த்திருக்கும் நமக்கு நிஜத்தில் ஒரு சூப்பர் ஹீரோ கிடைச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சிருக்கீங்களா? நான் யோசிச்சிருக்க! நினைக்கும் போதெல்லாம் ஒரு கிரேட் எக்ஸைட்மெண்ட்.  ஆனா நிஜத்துல ஒரு சூப்பர் ஹீரோவை ரெடி செய்ய நான் கடவுள் இல்லையே.  அதான் ஒரு கதை எழுதலாம்னு முடிவெடுத்துட்ட.

வாவ்...சூப்பர் ஹீரோ! அப்படினு தோனும் போதே அதான் நிறைய படத்துல பார்த்துட்டமேனு ஒரு தாட் கூட வரலாம்.  சூப்பர் ஹீரோவை, ஹீரோவாகவும் அவருக்கு கிடைச்சிருக்கும் பவர் வச்சு என்ன சாகசங்கள் செய்றாருனு மட்டுமே பார்த்த நமக்கு, பவரால பிரச்சனை ஏதும் வருமான தோனியிருக்கா? மூனாவது மனுஷனாலோ இல்லை வில்லனாலோ வர பிரச்சனை இல்லைங்க.  ஒரு சாதாரண மனுஷன் அசாத்தியமான சக்தியை அடையும் போது அவனுடைய இயல்புகள் என்னாகின்றன? உறவுகளின் நிலை என்ன? தன்னுடைய சுகங்களை இழக்கிறானா? தன்னுடைய சுகங்களை இழந்துதான் மற்றவருக்கு சேவை செய்ய முடியும்னு நிலையிருந்தா நம்மில் எத்தனை பேர் முன்வந்து இந்த சக்தியை பெறுவோம்? அசாத்திய சக்தியை அடையும் போது வரும் பின்விளைவுகளும் ஆபத்துகளும் என்னன்னுதா நாம பார்க்க போறோம்.

 

உங்க ஹீரோ பேரு என்ன?

சூப்பர் ஹீரோ ரெடியாயிட்டாரு....

ஆனா அவரோட பேரும் காஸ்ட்யூமும் பெண்டிங்கில் நிக்குது 🤔🤔🤔

நம்ம சூப்பர் ஹீரோக்கு மக்களே பேரு வச்சா என்ன?!

அதான் இங்கே வந்திருக்கோம்...

எஸ் மக்களே நீங்களே உங்க சூப்பர் ஹீரோக்கு பேரு வைக்க போறீங்க.  அதோட நிக்காம காஸ்ட்யூமும் டிசைன் செய்ய போறீங்க ☺☺☺

Super hero is waiting for your suggestions.

 

கேள்வி - பதில்கள்:

மிசரக சங்கினி என்றால் என்ன?

மிசரகம் என்பது ஒரு வகையான பாதரசம்.

சாமுத்ரிகா லக்‌ஷணத்தின்படி பெண்களில் நான்கு வகையுண்டு. அதிலொன்று சங்கினி என்பதாகும். 

மிசரக சங்கினி என்றால் பாதரச அழகி என்று பொருள்.

 

எந்த மொழியில் பெயர் இருக்க வேண்டும்?

ஹீரோவிற்கு தமிழ் பெயர் பரிந்துரையுங்கள் பிரென்ட்ஸ்.

 


மிழ் தென்றல் தேர்வு செய்யும் பெயர் மற்றும் ஆடை வடிவமைப்புக்கு பரிசாக 💰💰💰 ரூ.500/- 💰💰💰 வழங்கப் படும்.

ஒன்றிற்கும் மேற்பட்டவரின் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டால் பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்.

உங்கள் ஐடியாக்களை எந்த தயக்கமும் இல்லாமல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

உங்கள் ஐடியாக்கள் எங்களை வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10 செப்டம்பர்.

உடனே உங்க ஐடியாக்களை எழுதி அனுப்புங்க.

{jcomments on}

{kunena_discuss:1215}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.