Chillzee.in Un nesamathe en suvasamaai contest

Chillzee.in "உன் நேசமதே என் சுவாசமாய்" போட்டி முடிவு

ணக்கம் ஃபிரென்ட்ஸ்!

சித்ரா.வெ யின் ‘உன் நேசமதே என் சுவாசமாய்’ கதையில் கங்கா – துஷ்யந்த் பகுதி பற்றி உங்களின் ஊகங்களை பகிர்ந்துக் கொள்ள சொல்லி கேட்டிருந்தோம்.

இந்த புது வித போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள் 👋👋👋 & நன்றிகள் 🙏🙏🙏.

போட்டி எனும் போது வெற்றி பெற்றவர் ஒருவர் இருக்க வேண்டும் தானே? 🤔🤔🤔

அந்த வெற்றியாளர் யார் என்று பார்ப்போம்.

இதோ போட்டி பற்றியும், முடிவு பற்றியும் ‘உன் நேசமதே என் சுவாசமாய்’ கதையின் ஆசிரியர் ✍✍ சித்ராவே ✍✍ சொல்கிறார்:

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தையை எப்படி கொண்டு போகிறோம் என்பதை வாசகர்களின் விமர்சனம் தான் சரியாக எடுத்துச் சொல்லும்.. கதையோட முடிச்சை உடனே ஈஸியா கண்டுப்பிடித்தாலும், இல்லை வாசகர்களை அந்த கதை குழப்பினாலும் அது ஒரு எழுத்தாளருக்கு கொஞ்சம் சரிவு தான்..  அந்த வகையில் உன் நேசமதே என் சுவாசமாய் கதைக்கு ஒரு போட்டி வைத்து கங்கா துஷ்யந்தன் உறவை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள் என்று தெரிந்துக் கொள்ள கேட்டப்போது, உங்களின் பதில்கள் வெவ்வேறு விதமாக இருந்தாலும், யாரும் அவர்களது உறவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காததது ஒருவிதத்தில் கதைக்கு வெற்றி தான்.

உன் நேசமதே என் சுவாசமாய் போட்டிக்கு விடைகளை பகிர்ந்துக் கொண்ட தமிழ் தென்றல், கவிதா, கீதா, உமா மகேஷ்வரி, சாந்தி, சித்ரா ,தேன்மொழி, பிந்து, மங்களா அனைவருக்கும் நன்றி.

கதை ஓட்டம், கதையின் அடிப்படை கரு, கதை முடிச்சு அனைத்தையும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விடையில் தெளிவாக சொல்லி இருந்தார்கள்.

இருந்தும் கேள்விக்கான சரியான விடையை அளித்தது 🏆🏆 மங்களா vs 🏆🏆தான், நடந்ததை அப்படியே எடுத்து சொன்னது போல அவர்கள் விடை அமைந்து இருந்தது. கதையோடு சரியாக அவர்கள் பயணித்து இருப்பது அவர்கள் விடையிலேயே தெரிகிறது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் மங்களா 👏👏👏.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வாழ்த்துக்கள் மங்களா👏👏👏!!!! சித்ரா சொன்னது போல 100% சரியான ஊகத்தை பகிர்ந்து வெற்றி பெற்று இருக்கிறீர்கள்!!!! 👍👍👍

போட்டியை நடத்த ஒத்துழைத்து, வெற்றி பெற்றவரையும் தேர்வு செய்த சித்ராவிற்கும் எங்களின் நன்றிகள் 🙏🙏🙏.

{jcomments on}

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.