(Reading time: 3 - 5 minutes)

Chillzee புதிய பொலிவுடன் 2021ஐ உங்களுடன் வரவேற்கிறது

Chillzee புதிய பொலிவுடன் 2021ஐ உங்களுடன் வரவேற்கிறது.

 

‘ஹை-ஃபை’ மாற்றங்கள் என்றில்லாமல் படிக்கும் வாசகர்களுக்கும், எழுதும் எழுத்தாளர்களுக்கும் அனைத்தும் சுலபமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே மாற்றங்கள் செய்திருக்கிறோம்.

Chillzeeயின் இந்த புதிய வடிவத்தில் ஏதேனும் உதவிகள் தேவைப் பட்டால் “Community Support” பக்கம் சென்று உங்கள் கேள்விகளை கேளுங்கள்.

 

மற்ற புதிய மாற்றங்கள்:

வாசகர்களுக்கான மாற்றங்கள்:

ஆங்கில கதைகளை கண்டுப்பிடித்து வாசிப்பது சுலபமாக இல்லை என்று சிலர் கருத்துக்கள் பகிர்ந்திருந்தார்கள். அதனால் ஆங்கில கதைகளுக்கு என்று கிட்டத்தட்ட தனி தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

 

அதேப்போல குழந்தைகள் கதைகளையும் மற்ற கதைகளில் இருந்து பிரித்து, அவர்களுக்காக தனி “KIDS” பகுதி தொடங்கி இருக்கிறோம்.

   

வாசகர்களுக்கு படிக்க வசதியாக இருக்க காலை, மதியம், மாலை அப்டேட்ஸ் என்ற முறையை கை விட்டு, ஒரே நேரத்தில் அனைத்து அப்டேட்களையும் பகிருவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

   

எழுத்தாளர்களுக்கான மாற்றங்கள்:

வாசகர்கள் / எழுத்தாளர்கள் நேரடியாக பகிரும் flexi பகிர்வுகளை விரைவாக பப்ளிஷ் செய்யவும், மற்ற கதைகள், கட்டுரைகளுடன் ஷோகேஸ் செய்யும் விதத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

 

ஒரு நாளைக்கு மூன்று Schedule கதைகள் என்ற அளவை கை விட்டு, எழுத்தாளர்களே அவர்களுக்கு வேண்டிய எந்த நாளையும் தேர்வு செய்யும் முறையை அறிமுகப் படுத்தி இருக்கிறோம்.

  

Schedule கதைகளுக்கு இருந்த குறைந்தபட்ச பக்க அளவு விதிமுறையை நீக்கி, ஒவ்வொரு கதை முடிவிலும் ராயல்டி வழங்கும் முறை 2021ள் தொடங்கும் கதைகளுக்கு பின்பற்ற பட இருக்கிறது.

  

ப்போதும் போல அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்ட இந்த மாற்றங்களை அனைவரும் வரவேற்பீர்கள் என்று நம்புகிறோம்.

  

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:

முதாயம் என்பது நம்மைப் போன்ற ஒவ்வொரு தனி நபரில் இருந்து தொடங்குவது தான்.

நாம் சமுதாயத்தில் எதிர்பார்க்கும் மாற்றங்களை நம்மிடம் இருந்து தொடங்குவது தான் சரி!

2020ஐயே எதிர்கொண்டு விட்டோம், அப்புறம் என்ன!!!!!
2021 நம் அனைவருக்கும் இனிதானதாக தான் இருக்கும் என்று நம்புவோம்.

நம்மால் இயன்ற அளவில அனைவருக்கும் உதவுவோம், நன்மைகள் செய்வோம்.
பழைய கோபங்கள், வருத்தங்கள், போன்ற கசடுகளை மறந்து, தூக்கிப் எரிந்து, புதிதாய் பிறந்த வருடத்தில் புதியவர்களாய் நாமும் வலம் வருவோம்.

  

அனைவருக்கும் இனிய 2021 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

 

பிரியமுடன்,

Chillzee டீம்

 

18 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.