Chillzee 2016 Blockbuster Countdown - # 02
சில கதைகளை படிக்கும் போது உடனே உடனே அடுத்த பக்கங்களை திருப்பும் ஆவல் தோன்றும். சில கதைகளை படிக்கும் போது ஒவ்வொரு பக்கத்தையும் அனுபவித்து படிக்கும் ஆர்வம் தோன்றும்.
உள்ளம் வருடும் தென்றல் அது போல ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்து படிக்கும் ஒரு அனுபவம்.
வத்சலா எழுதிய இந்த கதை ஏப்ரல் 2015ல் நிறைவுப்பெற்ற கதை.
தன் அம்மாவின் ஜோசியத்தின் மீதான நம்பிக்கையால், விஷ்வாவிற்கு தாய் பாசம் கிடைக்காமல் போகிறது. அவனின் மனதிற்கு ஆறுதலாக இருப்பவள் அவனின் இனிய தோழி அபர்ணா.
அபர்ணாவின் மனம் கவர்ந்த பரத், விஷ்வாவின் அத்தை மகன். பரத் - விஷ்வா இடையே சிறு வயது முதலே இருக்கும் மறைமுக பகைமை அவளின் காதலுக்கு எதிரியாக வருமா?
கூடவே பரத்தின் தங்கை இந்துவிற்கு விஷ்வா மீது அன்பு இருக்கிறது. காதல் தோல்வியால் மன வருத்தத்துடன் இருக்கும் விஷ்வாவின் மனக்காயத்தை இந்துவின் அன்பு சரி செய்யுமா?
தன்னுடைய அழகான நடையால் நம்மை கதையுடன் கட்டி போட்டு விடுகிறார் வத்சலா.
ஒரு குடும்ப பின்னணியிலான காதல் கதையில் சஸ்பென்ஸ் கொண்டு வந்து நம் மனதை கவர்வது கதையின் தனி சிறப்பு.
கதையை பற்றி வத்சலா என்ன சொல்கிறார்கள் என்றால்,
ஹாய் ஃபிரண்ட்ஸ்
'உள்ளம் வருடும் தென்றல்' எழுத தொடங்கிய போது மிக சாதாரணமாகத்தான் ஆரம்பித்தேன். மழை சாரலோடு இனிதாக தொடங்கிய கதை. அபர்ணா, பரத், விஷ்வா, சுதாகர் என நான் கதாப்பதிரங்களுக்கு பெயர் வைத்ததும் சாதாரணமாகத்தான்.
கதை நகர நகர இவர்கள் எல்லாரும் நிஜ மனிதர்கள் என்றே ஒரு நம்பிக்கை பிறந்தது எனக்கு, இது எப்படி என இதுவரை எனக்கே புரியவில்லை. ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் ஒரு தனி அனுபவம் கிடைக்கும். அதுவும் 'சுதாகர் கீதோபதேசம்'..... கடைசி நிமிஷத்தில் தான் ஸ்ட்ரைக் ஆச்சு அந்த சீன். அது முடிச்சிட்டு திரும்ப படிச்சு பார்த்தப்போ 'இதெல்லாம் நான் தான் எழுதினேனா???' அப்படின்னு கூட தோன்றியது எனக்கு.
இந்த கதை இப்படி மனதோடு ஒட்டிக்கொள்ள சில்ஜீ லே எல்லாரும் கொடுத்த ஊக்கம், தோழிகள் நீங்க எல்லாரும் கொடுத்த கம்மென்ட்ஸ் இது ரெண்டும்தான் காரணம். Thanks a lot my dear friends.
'உள்ளம் வருடும் தென்றல்' எனக்கு எப்பவுமே ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.
உள்ளம் வருடும் தென்றல்.... மென்மையான தென்றல்...!
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'உள்ளம் வருடும் தென்றல்' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
