Chillzee 2016 Blockbuster Countdown - # 01
உலகில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி பேசும்/ விவாதிக்கும் நாம், சமுகத்தில் மாற்றம் ஏற்பட மாற வேண்டியது நம் மனம் என்பதை மறந்து விடுகிறோம்!
பிந்து வினோத்தின் காதல் நதியென வந்தாய் நம் மனதை சுய ஆராய்ச்சி செய்ய வைக்கும் ஒரு அழகிய கதை.
சிறு வயதில் உடல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகும் ப்ரியா, அந்த கொடியவனையே திருமணம் செய்து ஒரு சில நாட்களிலேயே விதவையாக நேர்கிறது.
மேற்படிப்பு படித்து வேலைக்கு சென்றாலும், நடந்த சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு அனைவரிடமும் இருந்து ஒதுங்கியே இருக்கும் ப்ரியாவின் வாழ்வில் வசந்தமாக வருகிறான் விக்கிராந்த். அவள் மீது உண்மையான காதல் கொள்பவன், அவளை அவளின் வட்டத்தை விட்டு வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறான்.
விக்கிராந்த் அவனின் முயற்சியில் வெற்றி பெற்றானா என்பது மீதி கதை.
ப்ரியா, விக்கிராந்த் மட்டுமலாமல் விக்கிராந்தின் பெற்றோர் ராஜம் - கணபதியும் கூட நம் மனதில் நிற்கிறார்கள்.
காதல் நதியென வந்தாய்.... அழகிய காதல்...!
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'காதல் நதியென வந்தாய்' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
நம் chillzeeயில் வெளியான சில கதைகளையும் அவற்றின் சிறப்புகளையும் செப்டம்பர் மாதம் பார்த்து விட்டோம்.
அக்டோபர் மாதத்தில் மீதி இருக்கும் கதைகளை ஒவ்வொன்றாக எடுத்து, அவற்றின் சிறப்பு அம்சங்களை ஆய்வு செய்து படித்து ரசிப்போம். காத்திருங்கள்!!!
{kunena_discuss:788}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
