(Reading time: 3 - 6 minutes)

கருத்துக் கதைகள் – 46. நம்பிக்கை - கிருத்திகா

Trust

ரு வணிகர்  விமானம் ஏறுவதற்கு மிக மிக தாமதமாக வந்தார் . போர்டிங் வாயில் மூடப்படும் முன் அவசரமாக  வியர்வை மற்றும் மூச்சுவாங்க ,  அவரது போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்து கொண்டு  விரைவில் விமானம் ஏறினார் 

அது மூன்று பேர் அமரும் இருக்கை ஒரு நடுத்தர வயது பெண் ஜன்னலோரமும் , நடைபாதை அருகே ஒரு  சிறிய பெண்னும் இருந்தார்கள் இவர் அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தவாறே தனது பெட்டியை மேலே வைத்துவிட்டு நடுவில் அமர்ந்தார்.

அவர் அந்த சிறு பெண்ணை பார்க்கும்போது தனது மகளை நினைத்தார் இருவருக்கும் ஒரே வயதுதான் இருக்கும் ... அந்த பெண் அமைதியாக வண்ணம் தீட்டி கொண்டிருந்தாள் ..அவரும் அந்த பெண்ணிடம் எப்போதும் போல் பேர் என்ன பொழுதுபோக்கு என்ன என்று பேச்சு கொடுத்துக்கொண்டு வந்தார் ..

அதே போல் உனக்கு  பிடித்த விலங்கு எது ??? போன்ற ஒரு சில வழக்கமான கேள்வியும், கேட்டு பேசிக்கொண்டு இருந்தார் . அவர் மனதில்  இந்த சின்ன பெண் தனியாக பயணம் செய்வது விசித்திரமாக பட்டது 

ஆனால் அவர் தன்னை தனது எண்ணங்களை தன்னுள்ளே புதைத்து வைத்துக்கொண்டார் .. எனினும் பயணம் முழுவதிலும் அவள் மீது ஒரு கண் வைக்கவேண்டும் என நினைத்தார் ... அவரும் பெண்ணை பெற்றவரல்லவா ???

சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் , விமானம் திடீரென குலுங்க தொடங்கியது . பைலட் ஒலிப்பெருக்கியின் மூலம் பயணிகளிடம்  நாம் கடினமான வானிலை எதிர் கொண்டிருக்கிறோம் , தங்கள் இருக்கை பெல்ட்கள் போட்டுகொண்டு , அமைதியாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் கூறினார்.

அடுத்த அரை மணி நேரத்திற்கு மேல் பல முறை விமானம் குலுக்க, கடுமையான தாழ்நிலைகளும் மற்றும் திருப்பங்களை செய்து கொண்டும் சென்றது ...சிலர் உயிர் பயத்தில் அழுது கொண்டு இருந்தனர்  மற்றும் பலர்  பக்கத்து இருக்கை பெண்மணிபோல் பிராத்தனை செய்துகொண்டிருந்தனர் ...

இத்துணை விசயங்கள் நடந்தபோதும் அந்த சிறிய பெண் மிகவும் அமைதியாக இருந்தாள் .. அவள் கலரிங் புக் பென்சில் எல்லாத்தையும் பாக்  செய்துவிட்டு அமைதியான முகத்துடன் இருந்தாள் ..இவருக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை ..

இவ்வாறாக ஒரு வழியாக விமானம் தன்னிலை அடைந்தது ...

மீண்டும் பைலட்  நிலைமை சுமூகமானத்தையும் இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்க போவதாகவும் அறிவித்தார் ..

அத்தனை பயணிகளிடம் இருந்தும் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது ..

பின் அவர் அந்த சின்ன பெண்ணை நோக்கி .. பாராட்டுதலாக இந்த சிறுவயதில் உனக்கு எவ்வளவு மனதைரியம் ..பெரியவர்கள் அனைவரும் பதட்டத்துடனும் பயத்துடனும் இருக்கும்போது நீ மட்டும் எப்படி இவ்வளவு அமைதியாக இருந்தாய் ????..என கேள்வியுடன் முடித்தார் ..

அந்த பெண் சிரித்துக்க்கொண்டே பைலட் என் தந்தை அவர் எப்படியும் என்னை கவனமாக தரையிறக்குவர் என எனக்கு தெரியும் எனவே நான் பயப்படவில்லை என கூறினாள் ..

அந்த குழந்தைக்கு தன் தந்தையின் மீது இருந்த நம்பிக்கை ...நம்மில் பலருக்கு நாம் வணங்கும் தெய்வத்தின் மீதுகூட இல்லை 

நம்பிக்கைவாழ்க்கைக்கு முக்கியமானதாகும் ..நம்பிக்கையின் அஸ்திவாரத்தில்தான் இந்தச் சமூக அமைப்பு சுழன்று கொண்டி ருக்கிறது. பெரிய வலைப் பின்னல்களைப் போல, ஒவ்வொருவருக்கிடையேயும் மெல்லிய நூலிழை போன்ற நம்பிக்கை இழையோடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருக்கிடையேயும் எந்த பந்தமோ, உறவோ, சம்பந்தமோ இல்லாவிட்டாலும், நம்பிக்கை என்ற நூலிழையில் எல்லோரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.

யானையின் பலம் தும்பிக்கையிலே

மனிதனின் பலம் நம்பிக்கையிலே 

Story # 45. Gen oru thathuvamalla... athu oru vazhkkai murai

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.