குழந்தைகள் சிறப்பு சிறுகதை - சிங்கத்தின் அச்சம் - நாரா நாச்சியப்பன்
ஒரு சிங்கம் காட்டில் அலைந்து கொண்டிருந்தது.
அதற்குப் பசி! பசி யென்றால் பசி அப்படிப்பட்ட பசி! எதிரில் ஒரு விலங்கு கூட அகப்படவில்லை.
வரவர இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் எச் சரிக்கையாகி விட்டன. சிங்கம் வருகிற நேரம் தெரிந்து எங்கோ பதுங்கி விடுகின்றன. அவற்றைத் தேடிப் பிடிப்பது முடியாது போல் இருந்தது.
பசி தாங்க முடியாமல் சினத்துடன். இரை தேடிச் சென்று கொண்டிருந்தது சிங்கம்.
கடைசியில் திடுதிப்பென்று ஒரு நரி எதிரில் வந்து அகப்பட்டுக் கொண்டது.
சிங்கம் அதன் மீது பாயத் தயாராக இருந்தது.
நரி குள்ள நரி. நல்ல தந்திரமுள்ள நரி. தெரியாத் தனமாக சிங்கத்தின் எதிரில் வந்துவிட்டது. ஆனால் அதன் மூளை உடனே வேலை செய்தது.
சிங்கத்தை ஏமாற்ற முடிவு செய்தது.
'ஏ சிங்கமே! நான் யார் தெரியுமா? நான் இந்தக் காட்டின் அரசன். என்ன துணிச்சல் இருந்தால் என் எதிரில் வருவாய்?'' என்று வலுவான குரலில் கேட்டது.
''ஏ அற்ப நரியே! உனக்கு என்ன பைத்தியமா? இந்தக் காட்டின் அரசன் நான் தான் என்பதை யறிய மாட்டாயா? உன்னை நீயே அரசன் என்று கூறிக் கொள்ளுகிறாயே! உனக்கு அறிவு இருக்கிறதா? என்று சிங்கம் கேட்டது.
''ஏ மூடச்சிங்கமே! நான் சொல்லுவதை நீ நம்ப வில்லையா? சரி என்னோடு வா. இந்தக் காட்டு