(Reading time: 8 - 16 minutes)

மங்களபுரி இளவரசி... - தங்கமணி சுவாமினாதன்

ஹாய் குட்டீஸ்...இன்னிக்கி நான் ஒங்களுக்கு ஒரு ஜோரான ராஜா ராணி கதை சொல்லப்போறேன்.

ராஜா ராணி கதைன்னா ஒங்களுக்கு ரொம்ப புடிக்கும்தானே?மங்களபுரி..மங்களபுரின்னு ஒரு நாடு.

அந்த நாட்டு ராஜா பேரு ஜெயசிம்மன்.அவரு ரொம்ப நல்ல ராஜா.அவரு தன்னோட நாட்டு மக்கள ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாரு.நிறையா கோயில்லாம் கட்டி குளம்லாம் வெட்டி தானதர்மம்லாம் செஞ்சாரு.அதிகமா வரியெல்லாம் போடல.அதுனால மக்களெல்லாம் ரொம்பவே சந்தோஷமா இருந்தாங்க.மக்கள் எல்லாருக்குமே ராஜா ஜெயசிம்மன ரொம்ப ரொம்ப புடிக்கும்.ராஜாவோட மனைவி ராணி பேரு மங்களாதேவி.அவங்களும் ரொம்ப நல்லவங்க.இவ்வளவு நல்ல ராஜா ராணிக்கு ஒருகொற.என்னன்னா பாவம் அவங்களுக்கு கொழந்தயே இல்ல.அவங்க பாவம்தானே?தினம் தினம் சாமிகிட்ட சாமி..எங்களுக்கு ஒரு கொழந்தய குடு...எங்களுக்குப்பின்னாடி இந்த நாட்ட ஆள ஒருவாரிசு இல்லியேன்னு ரொம்ப வருத்தப்பட்டு வேண்டிக்குவாங்க.மனசு உருக வேண்டிக்கிட்டா சாமி நல்லதுதானே செய்யும்?சாமி இந்த ராஜா ராணிக்கும் ஒரு கொழந்தய குடுத்திச்சு.ஆமாம்..ராணி ஒருஅழகான பெண் குழந்தைய பெத்தெடுத்தாங்க.ராஜாக்கும் ராணிக்கும் தாங்கமுடியாத சந்தோஷம் இருக்காதா பின்னே?நாடே சந்தோஷப்பட்டுது இளவரசி பொறந்திருக்கான்னு.ஆனாலும் ஒரு சின்னக்குறை ராஜா ராணிக்கு.பொறந்த குழந்தை ஆண்குழந்தையா இருந்திருக்கக் கூடாதா?பெண் குழந்தையா பொறந்துடுச்சேன்னு..தப்புதானே இப்பிடி நினக்கிறது?ஆணா இருந்தா என்ன?பெண்ணா இருந்தா என்ன?ராஜாவும் ராணியும் எதுக்கு தெரியுமா பெண்பிறந்திருக்கேன்னு கொற பட்டாங்க ஆணா இருந்தா பெரியவனாகி வில் வித்த,

princessவாள் சண்ட,குதிரை ஏற்றம் யானை ஏற்றம் எல்லாம் கத்துக்குவானாம்.ராஜாக்கு அப்பறம் இந்த நாட்ட ஆளுவானாம்.பொண்ணுன்னா கல்யாணம் பண்ணிக்கிட்டு வேற நாட்டுக்குப் போயிடுவாளாம்.நாட்ட ஆள யாருமே இருக்கமாட்டாங்களாம்.இது எப்பிடி இருக்கு?அதென்ன அப்பிடி? பொம்பபுள்ளைன்னா மக்கா?கொஞ்ச நாள்ளயே நல்ல வேள அவங்க மனச மாதிகிட்டாங்க. 

ஆம்பளைக்கு நிகரா இளவரசிய வளக்கணும்ன்னு தீர்மானிச்சாங்க.

இளவரசியோட பேரையே இன்னும் ஒங்களுக்கு சொல்லல்லியே..பேர் என்ன தெரியுமா..?

பிரபா...இளவரசி பிரபா...பேரு சூப்பரா இருக்குல்ல?குட்டி இளவரசிக்கு இப்ப வயசு மூணு.கொழுக் மொழுக்குன்னு,செவ செவன்னு ரொம்ப அழக்க்க்க்க்கா..க்யூட்டா,.பியூட்டிஃபுல்லா,சார்ம்மிங்கா, படு சுறு சுறுப்பா,துறுதுறுன்னு இருந்தா.இப்பிடி ஒரு பாப்பா இருந்தா நமக்கும் அதுங் கூட வெளையாட புடிக்கும்ல?ஒங்களுக்கு தங்கச்சியோ தம்பியோ குட்டிப் பாப்பாவா இருந்தா ஜாலியா வெள்ளாடுவீங்கள்ள?விளையும் பயிர் முளையிலேன்னு மூணு வயசுலயே இளவரசி பிரபா ரொம்ப கெட்டிக்காரியா தைரியசாலியா இருந்தா.

ராஜாக்கெல்லாம் எப்பவுமே விரோதிங்க இருப்பாங்கள்ள..அதுமாதிரி ராஜா ஜெயசிம்மனுக்கும் அன்னிய நாட்டு ராஜா சிலபேரு விரோதியா இருந்தாங்க.அனா அவங்களுக்கெல்லாம் ஜெயசிம்மன்னா சிம்ம சொப்பனம்.சிம்ம சொப்பனம்ன்னா என்னதுன்னு யோசிக்கிறீங்களா? ராத்திரி நாம தூங்கும்போது சிலசமயம் நமக்கு சொப்பனம் வரும்ல?அப்பிடி வர்ர சொப்பனத்துல நம்ம மூஞ்சிகிட்ட பெரிய சிங்கம் ஒண்ணு வாயப் பொளந்துகிட்டு வந்து சத்தமா கர்ச்ஜன பண்ணினா நமக்கு எப்பிடி பயமா இருக்கும்?நம்ம ஒடம்பே நடுங்கும்ல பயத்துல..அதுமாரி எதிரி ராஜாக்கெல்லாம் ஜெயசிம்மன நெனெச்சாலே பயம்.ஆனாலும் அவங்கெளுக்கெல்லாம் ஜெயசிம்மன சண்டேல தோக்கடிச்சி அவரோட நாட்ட புடிக்கணும்ன்னு ஆச.அந்த எதிரி அரசங்க்கள்ல ஒருத்தன் கெட்ட யோசன ஒண்ணு பண்ணினான்.அது என்னென்னா குட்டி இளவரசிய கொன்னுடறுது அவளக் கொன்னுட்டா ராஜாவும் ராணியும் அந்த வருத்ததுலயே செத்துடுவாங்க.

அப்பறம் ஜெயசிம்மனோட நாட்ட புடிச்சிடலாம்ன்னு.எவ்வளவு கேவலமான யோசன?பிறர் பொருளுக்கு ஆசப்படக் கூடாதுதானே?ஒங்களுக்கு தெரியிது..அந்த மொக்க ராஜாக்கு தெரிலயே?

ஒரு நாள் ராத்திரி ராணியும் குட்டி இளவாசி பிரபாவும் தூங்கிக்கிட்டு இருந்தாங்க.ராஜா கொஞ்சம்  தள்ளி தூங்கிக்கிட்டிருந்தாரு.அப்ப எதிரி நாட்டு அரசன் இருக்கானில்ல அவனோட ஆளு ஒத்தன் நைசா ஒரு வெஷப்பாம்ப ஜன்னல் வழியா இளவரசி பிரபா மேல தூக்கிப் போட்டான்.அது தொப்புன்னு இளவரசி மேல வந்து விழுந்துச்சி.அது இளவரசிய கொத்தருத்துக்காக படமெடுத்து நின்னுச்சு. பட்டுன்னு முழிச்சுக்கிட்ட இளவரசி கொஞ்சம் கூட பயப்படாம லபக்குன்னு அந்த பயங்கர பாம்போட கழுத்த அப்பிடியே கெட்ட்ட்ட்டியா..இறுக்க்க்கி புடிச்சிகிட்டா.தொப்புன்னு ஏதோ விழுந்த சத்தத்தக் கேட்டு ராஜாவும் ராணியும் முழுச்சுக்கிட்டாங்க.இளவரசி பாம்போட கழுத்த புடிச்சிருக்கறத பாத்த ராஜா சட்டுனு வாளால அந்த பாம்ப ரெண்டு துண்டா வெட்டினார்.தங்களோட பொண்ணு இளவரசியோட தைரியத்தப்பாத்து ராஜாவும் ராணியும் ரொம்ப சந்தோஷப் பட்டாங்க.

இப்ப இளவரசி பிரபாவுக்கு வயசு பதிமூணு. கல்வி கேள்வி வில்வித்தை வாள்சண்டை யானை ஏற்றம் குதிரை ஏற்றம் ஓவியம் வரைதல் என்று எல்லாவற்றிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்று விளங்கினா.அழகு அழகு..அப்பிடி ஒரு அழகா இருந்தா இளவரசி பிரபா.

அவ அழக கேள்விப்பட்டு வேர நாட்டு ராஜா தன்னோட புள்ளைக்கு இளவரசிய பொண்ணுகேட்டு வந்தான்.அந்த ராஜாவோட புள்ள ஒரு மக்கு.ஒரு பயந்தாங்கொள்ளி.ஒரு லூஸு.ஜெயசிம்மனுக்கு இது தெரியும்.அதுனால இளவரசிய கல்யாணம் பண்ணி குடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாரு.

அந்த ராஜாக்கு பயங்கர கோவம் வந்திடுச்சி. ரெண்டு மூணு பக்கத்து நாட்டு ராஜாக்கள சேத்துக்கிட்டு ராஜசிம்மனோட சண்டைக்கு வந்தான் அந்த ராஜா.திடீர்ன்னு பெரிய படையோடு அவங்க சண்டைக்கு வந்ததும் நம்ம ஜெயசிம்ம ராஜா கொஞ்சம் தடுமாறிட்டாரு பாவம்.ஒடனெ இளவரசி பிரபாவ தன்னோட நம்பிக்கைக்குரிய வேலைக்காரியோட தப்பிச்சுப் போக சொன்னாரு.அம்மா அப்பாவ விட்டுட்டு போக மாட்டேன் எதிரியோட நானே சண்ட போடுவேன்னு சொன்னா பிரபா.அவள சமாதானம் செஞ்சு தப்பிச்சுப் போக வச்சாaரு ராஜா.

எதிரி ராஜாக்கள்லாம் ஜெயசிம்மன ஜெயிச்சு ராஜா ஜெயசிம்மனையும் ராணி மங்களாதேவியையும் கைது பண்ணி பாதாளச் சிறையில் அடச்சுர்றாங்க.

இளவரசி பிரபா வேலக்காரியோட தப்பிச்சு இன்னூரு நாட்டுக்குப் போனா.அந்த நாட்டு ராஜாட்ட தன்ன மங்களபுரி இளவரசின்னு சொல்லிக்காம சாதாரண பொண்ணுன்னும் தனக்கு நன்றாக ஓவியம் வரையத்தெரியும்ன்னும் அந்த நாட்டு இளவரசிக்கு தான் ஓவியம் வரையக் கத்துத்தருவதாகவும் தனக்கு அந்த வேலையை தருமாரும் கேட்டா.அந்த ராஜாவும் சம்மதிக்க இளவரசி பிரபா அந்த ராஜாவோட அரண்மனையிலயே தங்கிட்டா.அந்த நாட்டு இளவரசியும் பிரபாவும் ரொம்ப தோஸ்த் ஆயிட்டாங்க.

என்ன குட்டீஸ்..தூக்கம் வருதா?மீதி கதைய நாளைக்கு சொல்லவா?இப்ப நல்லா தூங்குங்க..குட் நைட்...சமத்து குட்டீஸ்

ஹாய்..குட்டீஸ்..வாங்க..வாங்க..மீதி கதைய ஆரம்பிக்கலாமா?நேத்திக்கி எதுல முடிச்சோம்?

வெரி குட்... கரெக்ட்டா சொல்றீங்களே..நம்ம இளவரசி பிரபா அரண்மனையில இருந்தாலும் எப்பவும் அவளோட மனசு அப்பாவையும் அம்மாவையுமே நெனச்சுக்கிட்டு இருதிச்சு.அவங்கள எப்பிடியாவது காப்பாத்தணும் ...நாட்ட திரும்ப கைப் பத்த்ணும்ன்னே நெனச்சுக்கிட்டு இருந்திச்சு.

அவ இருக்கிற நாட்டோட ராஜாக்கு ஒரு மகன் இருந்தான்.அவன் ரொம்ப நல்லவன்.ரொம்ப புத்திசாலி.வீர தீர சூரன்.அவுனுக்கு இளவரசி பிரபாவ ரொம்ப புடிச்சிடுச்சி.அவள கல்யாணம் பண்ணிக்க ஆசப்பட்டான்.பிரபாகிட்டயும் தன் ஆசைய சொன்னான்.ஆனா பிரபா தான் ஒரு வேலைக்காரின்னு சொன்னா.அந்த இளவரசன் அதுனால பரவாயில்லன்னு பிடிவாதமா இருந்தான்.

அப்பரம் இளவரசி பிரபா தான் மங்களபுரி இளவரசின்னும் தன் தாய் தந்தய காப்பாத்தறதே தன்னோட முதல் கடமைன்னும் சொன்னா.அந்த நாட்டு ராஜாக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சுபோச்சு.பிரபாவுக்கு ஹெல்ப் பண்ணனும்ன்னு அந்த ராஜா நெனெச்சான்.ஒடனே

பெரும் படைய கூட்டிண்டு கெட்ட ராஜாக்களோட சண்டைக்குப் போனான்.இளவரசி பிரபாவும்

ஆம்பள வேஷம் போட்டுண்டு போர்க்களத்துல சண்ட போட்டா.அவளோட வீரத்தப் பாத்து

ஹெல்ப் பண்ணவந்த ராஜாவும் அந்த இளவரசனும் அசந்து போய்ட்டாங்க.எதிரியான கெட்ட

ராஜாக்களோட படையெல்லாம் சிதறிப்போச்சு.இளவரசி பிரபாவோட நாடு அவுளுக்கு திரும்பக் கிடைச்சிடிச்சி.அம்மாவையும் அப்பாவையும் காப்பாத்த அவ சிறைச் சாலைக்கு ஓடினா.

அங்க சங்கிலியால கட்டப்பட்டு எளச்சுப்போயி சோகமே உருவா ஒக்காந்திருந்த அமாவையும் அப்பாவையும் பாத்தா பிரபா.அவளுக்கு ரொம்ப வருத்தமா ஆயிடிச்சு.பின்ன அப்பிடித்தானே இருக்கும்?இல்லியா?ஒடிப்போய் அவங்கள கட்டியிருந்த சங்கிலிய கழட்டினா.ஆனா அவங்க

ரெண்டுபேரும் ஆம்பள வேஷத்துல இருந்த பிரபாவ தடுத்து...நீ எங்கள காப்பாத வேண்டாம் ...

எங்க பொண்ணு இளவரசி பிரபா வந்துதான் எங்கள காப்பாத்தணும்ன்னு சொன்னாங்க.ஒடனே

ஆம்பள வேஷத்துல இருந்த இளவரசி தன்னோட வேஷத்த கலெச்சா.தங்களொட பொண்ணு பிரபாவ பாத்த ராஜா ஜெயசிம்மனும் ராணி மங்களாதேவியும் சந்தோஷம் தாங்கமுடியாம பொண்ண கட்டிக்கிட்டு அழுதாங்க.பிரபாவுக்கும் ரொம்ப சந்தோஷம்..ரொம்ப சந்தோஷமாதானே இருக்கும்?அப்பறம் என்ன..?

ஹெல்ப் பண்ண வந்த ராஜாவும் ஜெயசிம்மனும் ஃப்ரண்ட் ஆயிட்டாங்க.அந்த ராஜாவோட மகனுக்கு

தன்னோட பொண்ணு இளவரசி பிரபாவ மகிழ்ச்சியோட திருமணம் செய்து கொடுத்தாங்க ராஜா ஜெயசிம்மனும் ராணி மங்களாதேவியும்.எல்லாரும் ஹேப்பியா இருந்தாங்க.

ஹாய் குட்டீஸ்..உங்களுக்கு இந்த கதை புடிச்சிருந்துதா?வழக்கம்போல மத்தவங்களே உங்களுக்கும் புடிச்சிருக்கா?குட்டீஸ்... இளவரசி பிரபா மாரி பாம்பு தேளெல்லாம் கையால புடிச்கிராதீங்க..கடிச்சிடும்..சரியா..எப்பவும் குட் பாயா,குட் கேளா இருக்கணும்..சீக்கிரமே இன்னொரு கதையோட வரேன்..பை.... நன்றி....

{kunena_discuss:875}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.