(Reading time: 8 - 15 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பரமார்த்த குருவும் சீடர்களும் - ஜான்சி

Paramartha guru

ஹாய் ஃபிரண்ட்ஸ், இந்தக் கதையை ஒருவேளை நீங்க எல்லோரும் முன்னே கேட்டிருந்திருக்கலாம். என் அப்பா ஸ்கூல் படிக்கும் போது இந்தக் கதை பாடப் புத்தகத்தில் இருந்ததா சொன்னாங்க. வெகு சுவாரசியமாக இருந்ததால் பகிர்கிறேன். அப்பா ஞாபக சக்தி ப்ளஸ் என்னோட எழுத்து நடை சேர்ந்த கலவையா இந்தக் கதை இருக்க போகுதுனு நினைக்கிறேன்........ஏதேனும் திருத்தம், மாற்றம் உண்டென்றால் உங்கள் கருத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள். நானும் அறிந்துக் கொள்கின்றேன்

ரு ஊரில் பரமார்த்த குரு என்னும் குருவும் அவருக்கு ஐந்து சீடர்களும் இருந்தார்களாம். சீடர்கள் பெயர் மட்டி, மடையன்,பேதை, மிலேச்சன், மூடன். அவர்கள் பெயரே அவர்களூடைய அறிவாற்றல் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களுடைய அறிவாற்றலுக்கு சிறிதும் குறைவு சொல்ல முடியாதபடி அவர்களுடைய குருவும் இருந்தார் என்பதை நாம் அனைவரும் பின் வரும் சில சம்பவங்களின் மூலமாக அறிந்துக் கொள்வோமா?

ஒரு நாள் என்னவாயிற்று என்றால் குருவும் சீடர்களும் ஊரைக் கடந்து நடந்துப் போய்க் கொண்டு இருந்தார்களாம். அவர்கள் செல்ல வேண்டிய பாதையில் ஒரு ஆறு குறுக்கிட்டதாம். உடனே பரமார்த்த குரு அவரது சீடர்களிடம்,

சீடர்களே , இப்போது நாம் இந்த ஆற்றைக் கடந்துச் செல்ல வேண்டியிருக்கின்றது, ஆதலால் இந்த ஆறு முழித்திருக்கிறதா இல்லையா என்று பார்த்து வாருங்கள் என்றுக் கூறினார்.

உடனே சீடன் மட்டி முன்வந்து , "அன்பார்ந்த குருவே, இதோ நான் ஆறு முழித்து இருக்கிறதா இல்லையா என்று இப்போதே பார்த்து வருகிறேன்"

என்றுச் சொல்லியவனாக பயந்து பயந்து மெதுவாக நடந்து ஆற்றின் அருகில் சென்று தான் புகைத்துக் கொண்டு இருந்த சுருட்டை எடுத்து ஆற்று நீரில் வைத்தான். உடனே, ஆற்றுத் தண்ணீரில் எரிந்துக் கொண்டிருந்த சுருட்டின் தீக்கங்குப் பட்டு "ஸ்ஸ்ஸ்" என சப்தம் எழவே தப்பித்தோம் பிழைத்தோம் என்று மிகுந்த பயத்தோடு அரக்க பரக்க அவன் ஓடி வந்து விட்டான்.

"அன்பார்ந்த குருவே,அன்பார்ந்த குருவே வேண்டாம் வேண்டாம், நாம் இப்போது அங்கு போக வேண்டாம். ஆறு விழித்து இருப்பதோடு மிகவும் கோபமாக இருக்கின்றது, அதனால் தான் கோபத்தில் சப்தம் எழுப்பியது" என்று கூறினான்.

அதைக் கேட்டவர்கள் ஆற்றின் கோபம் தீரும் வரை அல்லது ஆறு தூங்கும் வரை அங்கேயே ஆற்றின் கரையில் உட்கார்ந்து காத்திருக்கத் தொடங்கினார்கள். அப்போது மடையன் சொன்னான்,

" ஆம் அன்பார்ந்த குருவே இந்த ஆறு மிகவும் பொல்லாதது. ஒரு நாள் நான் உப்பு மூட்டையைச் சுமந்துக் கொண்டு இந்த ஆற்றைக் கடக்க முயன்றேன்".........சொல்ல வந்தவன் வாயில் துணி வைத்து அழலானான்.

"அப்புறம் என்னவாயிற்று? அவனை ஆறுதல் கூறி தேற்றினர் மற்ற சீடர்கள்.

"அப்புறம் என்னவாயிற்று சொல் சீடனே?" என பரமார்த்த குருவும் கேட்க,

:"இந்த ஆறு கொடிய விதமாக எந்தன் உப்பு மூட்டையை தின்று விட்டது அன்பார்ந்த குருவே...... ஆற்றைக் கடந்த பின்னால் பார்த்தால் என்னுடைய பையில் உப்பையேக் காணமுடியவில்லை" என ஓ வெனக் கதறி அழுதான்.

பலவாறாக அவனைத் தேற்றியவர்கள் அங்கேயே சில நேரம் காத்து இருக்க , மடையன் கூறிய கொடிய கதையைக் கேட்டதிலிருந்து ஆற்றின் அருகேச் சென்று ஆறு தூங்கி இருக்கிறதா இல்லை முழித்து தான் இருக்கிறதா என்பதை இரண்டாவது முறையாக அறிந்துக் கொள்ள ஆற்றின் அருகேச் செல்ல வேண்டியிருந்தும், யாருமே செல்ல துணியவில்லை.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பரமார்த்த குருவோ,

"சீடன் பேதையே , ஆறு முழித்துக் கொண்டிருக்கின்றதா? இல்லை தூங்கி விட்டதா? என்றுப் பார்த்து வா" என ஆணையிட்டார்.

பேதையின் உள்ளமும் உடலும் நடு நடுங்க ஆற்றின் அருகேச் சென்றான். ஏற்கெனவே ஆற்றைச் சோதித்து அறிய பயன்ப்டுத்தி இருந்த சுருட்டை இப்போது மறுபடியும் ஆற்று நீரில் வைத்துப் பார்த்தான். இப்போதோ சத்தமே வரவில்லை.

"ஆஹா நாம் உயிர் பிழைத்து விட்டோம். ஆறு நம்மை விழுங்கவில்லை. அத்தோடு சப்தமும் எழுப்பவில்லை" என்கிற உற்சாகத்தோடு குருவிடம் வந்தவன்.

"அன்பார்ந்த குருவே, ஆறு தற்போது உறங்கி விட்டது" என மகிழ்ச்சியாக கூறினான். பரமார்த்த குரு அனைத்துச் சீடர்களையும் அழைத்து ,

" அன்புச் சீடர்களே, வாருங்கள் நாம் இப்போது இந்த ஆற்றைக் கடந்துச் செல்ல வேண்டும். ஆறு தற்போது உறங்கிக் கொண்டு இருந்தாலும் திடீரென விழித்து விட்டால் நம்மில் யாரையாவது விழுங்கி விடக் கூடும். எனவே , ஒருவர் பின் ஒருவராக "அடி மீது அடி வைத்து அக்கரைப் போய்ச் சேருவோம்." 

என்றுக் கூறி வழிநடத்தினார். அனைவரும் மிகவும் பயந்தவர்களாக அவர்கள் அந்த ஆற்றை அமைதியாக கடந்து அக்கரைக்கு ஒருவாறாக வந்துச் சேர்ந்தனர்.

சற்று நேரம் கழித்து சீடன் மிலேச்சனுக்கு ஒரு சந்தேகம் நேரிட்டது.

"அன்பார்ந்த குருவே, நாம் அனைவரும் சரியாக அந்தக் கரையிலிருந்து இந்தக் கரைக்கு வந்து விட்டோமா என்று எவ்வாறு பரீட்சித்து அறிந்துக் கொள்வது. நம்மில் யாரையாவது இந்த ஆறு ஒருவேளை விழுங்கி இருந்தால் நமக்கு எவ்வாறு தெரியவரும்?.

பரமார்த்த குரு அவனிடம் , "கவலைப் படாதே சீடனே, என்னுடைய சீடர்களாம் உங்கள் எண்ணிக்கை ஐந்து , என்னையும் சேர்த்து எண்ணினால் நாம் மொத்தம் ஆறு பேர். ஆகவே , நாம் ஒருவரை மற்றவர் எண்ணினால் எளிதாக 6 பேரும் இக்கரைக்கு வந்துச் சேர்ந்து விட்டோமா என்பதை நாம் அறிந்துக் கொள்ளலாமே? " என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.