(Reading time: 2 - 3 minutes)
Latest Technology
Latest Technology

Latest Technology – ஊசி இல்லாத இன்ஜெக்ஷன்

To read this article in English, please click CLICK HERE.

   

   

ங்களுக்கு டிரிபனோபோபியா - ஊசிகள் பற்றிய பயம் (Trypanophobia) இருந்தால், இது உங்களுக்கான  நல்ல செய்தி.

  

டச்சு நாட்டு விஞ்ஞானி டேவிட் பெர்னாண்டஸ் ரிவாஸ் குமிழி துப்பாக்கி (Bubble gun) என்ற ஊசி இல்லாத இன்ஜெக்ஷன் போடும் முறையை கண்டுபிடித்துள்ளார். அவரது இந்த புதிய முறை கிட்டத்தட்ட வலியே இல்லாதது என்று அவர் கூறுகிறார்.

இது உண்மையாக இருந்தால், இது மருத்துவ கழிவுகளை குறைக்க உதவும் மற்றும் ஊசி போடுவது பற்றிய பயத்தை மறையச் செய்யும்.

  

இது எப்படி செயல்படுகிறது:

இந்த குமிழி துப்பாக்கி, பேஷன்ட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய திரவம் இருக்கும் கண்ணாடியை லேசர் பயன்படுத்தி வெப்பப்படுத்துகிறது. மில்லி விநாடிகளுக்குள் திரவத்தில் ஒரு குமிழி உருவாகிறது,  அந்த திரவத்தை மணிக்கு 100 கிமீ வேகத்தில் இது வெளியேற்றுகிறது.

அந்த வேகத்தில், ஊசி எந்த காயத்தையும் ஏற்படுத்தாது. அதனால் எந்த வலியும் இருக்காது.

  

Bubble gun எனும் இந்த குமிழி துப்பாக்கி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அனுமதி பெற்று பயன்பாட்டிற்கு வரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

------------

Click for More Technology

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.