(Reading time: 2 - 3 minutes)
Handbag-smaller-than-salt-sold-for-more-than-51-lakh-rupees
Handbag-smaller-than-salt-sold-for-more-than-51-lakh-rupees

வினோத செய்திகள் - ₹51.7 லட்சத்துக்கும் அதிகமான விலையில் விற்ற ‘உப்பை விட சிறிய’ ஹான்ட்பேக்!

புதன்கிழமை நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில், வெறும் 657 x 222 x 700 மைக்ரான் (அல்லது 0.03 அங்குல அகலத்திற்கும் குறைவான) அளவுள்ள ஒரு சிறிய ஹான்ட்பேக் ₹51.7 லட்சத்துக்கு ($63,000) மேல் விற்கப்பட்டது.

  

மனித கண்ணால் இதை ஈசியாக பார்க்க முடியாது. அதற்காக இதனுடனே ஸ்பெஷல் டிஸ்ப்ளே இருக்கும் மைக்ரோஸ்கோப்பும் உள்ளது.

  

"மைக்ரோஸ்கோபிக் ஹேண்ட்பேக்" என்று MSCHF இதற்கு பெயர் வைத்துள்ளது! இந்த ஹான்ட்பேக் ஊசியின் கண்ணுக்குள் செல்லும் அளவுக்கு சிறியது மற்றும் ஒரு கல் உப்பின் அளவை விடவும் கூட சிறியது!!!

  

இரண்டு-ஃபோட்டான் பாலிமரைசேஷனைப் பயன்படுத்தி இந்த ஹான்ட்பேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக, மைக்ரோ அளவிலான பிளாஸ்டிக் பாகங்களுக்குப் பயன்படுத்தப்படும் 3D-பிரின்டிங் உற்பத்தி தொழில்நுட்பமாகும்.

  

ஹான்ட்பேகைப் பார்க்கக்கூடிய டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்ட மைக்ரோஸ்கோப்புடன் இந்த ஹான்ட்பேக் விற்கப்பட்டது. அற்கான விலை ₹51.7 லட்சம் மட்டுமே!!!!

   

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.