(Reading time: 2 - 4 minutes)
drought reveals ancient symbols dinosaurs to human bodies
drought reveals ancient symbols dinosaurs to human bodies

வினோத செய்திகள் - வறட்சியின் காரணமாக வெளிவரும் பழங்காலச் சின்னங்கள் – டைனோசரஸ் முதல் மனித உடல்கள் வரை!

உலங்கெங்கிலும் வெட்பம் அதிகமானதால், நீர் மட்டம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் பல பழங்காலச் சின்னங்கள் நீர் நிலைகளில் கண்டுப்பிடிக்கப் பட்டு வருகின்றான்.

  

கிழக்கு செர்பியாவில், இன்னமும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட டஜன் கணக்கான ஜெர்மன் போர்க்கப்பல்கள் வறண்டு கிடக்கும் டான்யூப் நதியில் தெரியத் தொடங்கி இருக்கின்றன.

  

“ஸ்பானிஷ் ஸ்டோன்ஹெஞ்ச்” என்று அழைக்கப்படும் பல ஆண்டுகளுக்கு முந்தைய கல் வட்டம் ஒன்று, ஸ்பெயின் கிராமப்புறத்தில் குறைந்து வரும் வால்டெகானாஸ் நீர்த்தேக்கத்தில் வெளிப்பட்டுள்ளது.

  

600 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் பௌத்த சிலைகள் யாங்சே நதியில் கண்டுப்பிடிக்கப்பட்டு இருக்கிறது.

  

அமெரிக்க மாநிலம் உட்டாவில் உள்ள லேக் மீட் ஏரியில் பல வருடங்களுக்கு முந்தைய மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  

இதை எல்லாம் தூக்கி சாப்பிடுவதைப் போல, அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் கடுமையான வறட்சி காரணமாக 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

தட்ப வெட்ப மாற்றங்கள் பற்றி அதிக விவாதங்கள் போய் கொண்டிருக்கும் இந்த நாட்களில் இதுப் போன்ற கண்டுப்பிடிப்புகள் இந்த தலைப்பை இன்னும் பரபரப்பானது ஆக மாற்றி இருக்கிறது.

   

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.