Oru veedu iru vaasal - Tamil thodarkathai
Oru veedu iru vaasal is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fifty Second serial story at Chillzee.
முன்னுரை
முன்னாள் காதலியையும் விட்டுக் கொடுக்க இயலாமல் இன்னாள் மனைவிக்கும் துரோகம் இழைக்க முடியாமல் தன் காதலை தன் மனைவி புரிந்துக் கொள்வாளா தன் மகிழ்ச்சியை காதலி புரிந்துக் கொள்வாளா என ஏங்கும் ஒரு நாயகனின் கதையிது.
-
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 01 - சசிரேகா
ரூபாவை மறக்க பல நாள் அவன் எடுத்துக் கொண்ட பயிற்சி வீண் போகவில்லை, இப்போது கண்கள் மூடினால் அதில் ஆனந்தி தெரிந்தாள், அவளின் முகம் தெரியவும் அவனின் இதழ் புன்னகையில் மலர்ந்தது. அக்கா என வாய்விட்டு சொல்லியபடியே மனதுக்குள் அப்படியே அம்மாவை போலவே மாறிட்ட அக்கா என நினைத்துக் கொண்டு உறங்கினான்
... -
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 02 - சசிரேகா
அவளைப் பார்க்கறப்பலாம் நான் எந்தளவுக்கு முட்டாளா இருந்திருக்கேன், எந்தளவுக்கு ஏமாளியா இருந்திருக்கேன்னு நினைச்சா எனக்குள்ள ஒரு வெறி வரும், அந்த வெறி எனக்கு தைரியத்தை தரும் அதான் வைச்சிருக்கேன் வெங்கி மாமா என்றான் ஆனந்த்
-
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 03 - சசிரேகா
நீயே இன்னிக்குதான் ஆபீசுக்கு வந்திருக்க, அதனால உனக்கு எதுவும் தெரியாது, யாரை பத்தியும் புரிஞ்சிக்காம ஏதேதோ பேசற, ஒரு வாரம் போகட்டும் அதுக்குள்ள உனக்கு ஓரளவுக்காவது புரியும் அப்ப பாரு, நீ வேணாம்னு நினைக்கறவங்க கூடதான் நீ வேலை செய்ய முடியும் என்றான் வெங்கடேசன் ஆனந்திடம்
-
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 04 - சசிரேகா
இதப்பாருடா நீ எதையோ மனசுல வைச்சிக்கிட்டு பேசறன்னு தெரியுது பேசிக்கோ, எவ்ளோ வேணும்னாலும் பேசிக்கோ ஆனா உன் மாமாவை பத்தி குறை சொல்ற தகுதி உனக்கு கிடையாது என கோபமாக ஆனந்தை திட்டினாள் அவனின் அக்கா
-
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 05 - சசிரேகா
உங்க பேச்சை நம்பி இவரை பார்க்காமலே மானசீகமா இவரை விரும்ப ஆரம்பிச்சேன் ஆனா, இவரை பார்த்த பின்னாடி இவர் என்கிட்ட நடந்துக்கிட்டதை பார்த்து நான் வாழ்க்கையே வெறுத்துட்டேன், இவரை விரும்பின நானே இவரை வெறுக்க ஆரம்பிச்சிட்டேன், இவர் எனக்கு வேணாம் அண்ணா” என்றாள் ரோஜா வெங்கடேசனிடம் அதைக்கேட்டு வெங்கடேசன்
... -
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 06 - சசிரேகா
ரோஜா ஒரு விசயம் சொல்றாள்ணா அதுல பல அர்த்தம் இருக்கும், இங்க நடக்கற குளறுபடிகளை வைச்சி அவள் அப்படி சொல்றா, எங்க பழி என் மேல விழுந்து அதனால நம்ம உறவுல விரிசல் வந்துடுமோன்னு பயப்படறா, இதைப்பத்தி ஏற்கனவே அவள் பலமுறை சொல்லியிருக்கா, இப்ப எனக்கும் அது சரின்னுதான் படுது என்றான் ஆனந்திடம்
... -
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 07 - சசிரேகா
அந்த காலத்திலேயே வாஸ்து எல்லாம் பார்த்து முறைப்படி கட்டியிருக்காங்க, இந்த வீட்ல யார் இருந்தாலும் அவங்க செல்வ செழிப்போட இருப்பாங்களாம், அதோட இந்த வீட்டோட இன்னொரு அம்சமே இந்த வீட்டுக்கு அக்கம் பக்கத்தில எதிர்க்கன்னு எந்த வீடு இருந்தாலும் சரி, அவங்களும் செல்வ செழிப்போட இருப்பாங்களாம் அப்படியே
... -
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 08 - சசிரேகா
நீ அன்னிக்கு வருத்தப்பட்டு பேசினியே, கண்கள் கலங்கி கண்ணீரோட நீ நின்னப்ப உன் கண்ணீர்ல தெரிஞ்சதே அந்த காதல், அதுல கவரப்பட்டு வந்து உன் முன்னாடி இப்படி ஹீரோ போல நிக்கறேன் நீதான் என் ஹீரோயின் எப்படி என்றான் ரோஜாவிடம் ஆனந்த்
-
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 09 - சசிரேகா
என்னவா என்னால அவனை கல்யாணம் செய்துக்க முடியாதுன்னு என் அண்ணாகிட்ட சொல்லிட்டு, கையோட கையா நேரா கடைக்குப் போய் ராகவனை பார்த்து திட்டி உன்னை கல்யாணம் செய்துக்க முடியாது, எனக்கு இந்த வேலை வேணாம்னு சொல்லிட்டு நேரா என் புருஷன்கிட்டயே வந்து சேர்ந்துட்டேன் போதுமா” என ஏற்றி இறக்கிச் சொன்னாள்
... -
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 10 - சசிரேகா
ரோஜாவோட வேலையே ஆபீசில நடக்கற தில்லுமுல்லு, எவன் எல்லாம் ஆபீசுக்கு கெடுதல் செய்றான்லாம் கண்டுபிடிச்சி சொல்றதுதான் என்றான் வெங்கி செல்லப்பாவிடம்
-
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 11 - சசிரேகா
ஆனந்த் ரோஜாவைதானே விரும்பறான் அதான் அவன் மனசு மாறி எங்கயாவது போயிடறதுக்குள்ள அவனுக்கு கல்யாணம் செய்து வைச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன், விட்டா இவன் ரூபா விசயத்தை நினைச்சி எங்கயாவது போயிட்டா அவனை திரும்பவும் எங்கன்னு போய் தேடறது சொல்லுங்க என்றாள் ஆனந்தி வெங்கியிடம்
-
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 12 - சசிரேகா
காதல்ங்கற உரிமையில உன்கூட சண்டை போட்டது பெரிய விசயமா தெரியுதுல்ல, உலகத்திலயே சிறந்த விசயம் எது தெரியுமா ஒருத்தன் தான் செய்த தவறை உணர்ந்து திருந்தி மன்னிப்பு கேட்க வந்தா அவனை மன்னிச்சி விடறதுதான் அந்த நல்ல குணம் கூட உன்கிட்ட இல்லையா ஆனந்த் என்றாள் ரூபா
-
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 13 - சசிரேகா
ஆனந்த், ரூபா கண்ல உன் மேல இருக்கற காதலை பார்த்தேன், காதல் தோல்வியால நீ எவ்ளோ நாள் மனசு உடைஞ்சிப் போய் கிடந்த, அவள் பொண்ணுடா துக்கம் தாங்காம தற்கொலை செய்துக்கிட்டா என்ன செய்றது சொல்லு என்றான் வெங்கி
-
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 14 - சசிரேகா
என்னடா பிரச்சனை உனக்கு, இந்த வீட்ல உன் மனைவி ரோஜா இருக்கா, பக்கத்து வீட்ல உன் காதலி ரூபா இருக்கா, ரெண்டு பேருக்கும் அன்பை காட்டு, சந்தோஷத்தை கொடு அவ்ளோதான் சிம்பிள் என்றான் வெங்கி ஆனந்திடம்
-
தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 15 - சசிரேகா
ஆனந்தின் மனதில் இப்போது ரூபாவும் இல்லை, அவளால் உண்டான காதலும் இல்லை, அவளால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் இல்லை, வலி வேதனை எதுவும் இல்லை ரோஜா மீதான காதல் மட்டுமே இருந்தது