தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 02 - சசிரேகா
விடிகாலை நேரம் சூரியன் மெல்ல தன் ஒளியை வீசிக் கொண்டிருக்க அந்த ஒளியால் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட ரோஜா செடிகள் புத்துணர்ச்சியடைந்தது. அதிலும் பனிதுளிகளால் மூடப்பட்ட ஒரு ரோஜா மொட்டு மெல்ல மெல்ல ஒவ்வொரு இதழாக விரிய பூக்க தொடங்க அந்த பூ பூக்கும் அந்த தருணத்தை காண்பதற்காகவே அதற்கு வெகு அருகில் அமர்ந்துக் கொண்டு ரசித்துப் பார்த்தாள் ரோஜா. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ அந்த பூ மொட்டில் இருந்து விரிந்து பூவாக மலர மலர அவளின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. ஒருவழியாக பூ மலர்ந்ததும் ஏய்ய்ய்ய் என சந்தோஷமிகுதியில் கூச்சலிட்டாள்
அவள் நட்டுவைத்த ரோஜா செடியில் பூத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ை உங்களோட பகிர்ந்துக்கலாம்னு பார்த்தேன் நீங்க என்னடான்னா அலுத்துக்கறீங்க“
”அலுத்துக்காம என்ன செய்யச் சொல்ற, தோட்டம் முழுக்க ரோஜா செடிகளை நட்டு வைச்சிருக்க, ஒவ்வொரு நாளும் ஒரு கூடை அளவுக்கு பூ பூக்குது இதுல புதுசா ஒரு செடி வைச்சி அதுல ஒரு பூ பூத்ததும் என்னவோ இதுதான் முதல் முறைங்கற மாதிரி சந்தோஷப்படற, எப்பவுமே நடக்கறதுதானே” என பாட்டி சொல்ல அதற்கு ரோஜாவோ