(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 12 - சசிரேகா

  

றுநாள் பொழுது விடிந்தது. 

   

காலை 7 மணி அளவில்

   

விடிகாலையில் சீக்கிரமாகவே எழுந்த சரண்யா ரெடியாகி ஹாலில் தயாராக காத்திருந்தாள். அந்நேரம் அறையைவிட்டு ரெடியாகி வெளியே வந்த கீர்த்தனா சரண்யா தயாராக இருப்பதைக்கண்டு வியந்தவள் பாட்டியை தேடி கிச்சனுக்குச் சென்றாள்

   

”பாட்டி என்ன சரண்யா ரெடியாகி உட்கார்ந்திருக்கா என்ன விசயம்”

   

”நேத்து தேவா அவளை திட்டினான்ல அதான் சீக்கிரமா எழுந்து ரெடியாகி உட்கார்ந்திருக்கா”

   

“எதுக்கு உட்கார்ந்திருக்கா“

   

”கோயிலுக்கு போகத்தான் போல” என சொல்ல

   

”அப்ப நானு” என்றாள் அச்சத்துடன்

   

“நீயும் போ” என சொல்ல அவளும் அவசர அவசரமாக காபி தயாரித்தாள். தாமரையோ

   

”நான் டிபன் செய்து வைக்கிறேன் நீ தேவாவை எழுப்பு போ” என சொல்ல அவளும் காபியுடன் தேவாவை காணச் சென்றாள்.

   

அவன் அறையில் குளித்துக் கொண்டிருக்கவே

   

”ஏங்க காபி கொண்டாந்திருக்கேன்”

   

“வரேன் இரு” என சொல்ல அவளும் காத்திருந்தாள். 2 நிமிடத்தில் குளித்துவிட்டு வெளியே வந்தவன் அங்கு காபியுடன் நின்றிருந்த கீர்த்தனாவைக் கண்டு சிரித்து

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.