(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”கோயிலுக்கு” என இருவரும் சேர்ந்தாற் போல கத்தவே அதிர்ந்தான்

   

”ஓ கோயிலா இல்லை இன்னிக்கு நான் தாமரையோட போறேன், நீங்க உள்ளயே இருங்க”

   

“பரவாயில்லை நானும் வரேன்” என சரண்யா முன்னாடி வர கீர்த்தனாவும் முன்னாடி வந்தாள்

   

”நானும் வரேன்” என்றாள்

   

அனைவரையும் பார்த்தவன் தாமரையிடம்

   

”நாம போலாம் வா” என சொல்ல அவரோ சிரித்துக் கொண்டு

   

”எனக்குத் தெரியும் நீ ஏன் என்னை இழுக்கறேன்னு நான் வரலை நீயும் உன் 2 பொண்டாட்டிங்களுமே போங்க” என சொல்லிவிட்டு அவர் வீட்டுக்குள் செல்லும் போது தாஸையும் இழுத்துக் கொண்டு செல்ல இப்போது தேவாவின் பக்கத்தில் 2 பெண்களும் வந்து நின்றுவிட்டனர். 

   

வேறு வழியில்லாமல் இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு கோயிலை அடைந்து தரிசனம் முடித்து தியானத்தில் அமர்ந்தான் தேவா. இரு பெண்களும் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருக்க தேவாவின் தியானத்தில் நடுவில் வந்தாள் சரண்யா அவள் காலையில் கிறக்கமாக பார்த்தது முதல் தன்னிடம் அவள் நடந்துக் கொண்டது வரை நினைவு வரவே உடனே கண்விழித்தான்

   

”என்னால தியானம் செய்ய முடியலை” என அவன் சொல்ல சரண்யா உடனே ஆர்வமாக

   

”என்னாலயா” என கேட்க அவன் ஆம் என தலையாட்டவே கீர்த்தனா கோபமாக எழுந்தாள்

   

”நான் வீட்டுக்குப் போறேன்” என்றாள்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.