Nenjukkulle innaarunnu - Tamil thodarkathai
Nenjukkulle innaarunnu is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fifty First serial story at Chillzee.
முன்னுரை
இரு பெண்களால் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளும் அவர்களால் அவன் தன்னுடைய நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என அவனுக்கு பிடித்த உறவுகள் அவனது தொழில்களையும் இழந்துவிடுகிறான். அவர்களை இறுதியில் மறுபடியும் அடைந்து தொழிலிலும் எவ்வாறு உயர்கிறான் எப்படி அந்த இரு பெண்களிடம் இருந்து கதாநாயகியை காப்பாற்றி தன் காதலை உணர்த்தி அவளை கைபிடிக்கிறான் என்பதே இக்கதையாகும்.
-
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 01 - சசிரேகா
கீர்த்தனா வந்தது மட்டும் போதும் என நினைத்த விக்ரம், தேவனும் அவளை ஆசையாக அதை விட காதலாக பார்ப்பதை அறியாமல் அவளை பார்த்துச் சிரித்தான். என்னவோ அவள் தனக்காகவே சிரித்தாள் என நினைத்து மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டான். இருவரது போக்கினைக் கண்ட தாஸ்க்கு மட்டும் ஏதோ ஆபத்து வரப் போகிறது இரு நண்பர்களுக்கு
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 02 - சசிரேகா
”இப்ப நீ சத்தியம் பண்ணிட்டு அப்புறம் நீ சத்தியத்தை மீறி உண்மையை சொன்ன தேவாவுக்கு கெடுதல் நடக்கும் பார்த்துக்க” என மிரட்ட தாஸ் சற்று மிரட்சியுடன் சரியென சத்தியம் செய்துவிட்டு என்ன என்பது போல் சைகை செய்ய அவரோ அவனது காதோரம் ஒரு பயங்கர உண்மையை சொன்னார். அது ”அந்த தாமரை கல்யாணத்துக்கு முன்னாடி சின்ன
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 03 - சசிரேகா
”இத்தனை வருஷமா கல்யாணம் வேணாம் வேணாம்னு தேவா சொன்னதுக்கு காரணம் இதுதான்னு புரிஞ்சிக்கிட்டேன். அவனுக்கு இந்த சரண்யாவைத்தான் பிடிச்சிருக்கு, அதனாலதான் அவளை கூட்டிட்டே வந்து இங்க விட்டிருக்கான். இதைப்பத்தி அவன் கிட்ட கேட்க நினைச்சேன் அதுக்குள்ள கோயிலுக்கு போயிட்டான் வரட்டும் நான் அவன்ட்ட பேசி நல்ல
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 04 - சசிரேகா
விக்ரம் உன்கிட்ட பேசற விதம் அப்படியிருக்கலாம், நேத்து நைட் தாஸ்கிட்ட சொல்லியிருக்கான். உன்னைப்பார்க்கவே மாசாமாசம் ஹாஸ்டலுக்கு போனதாவும், பவி கல்யாணம் முடிஞ்ச உடனே உன்கிட்ட பேசி கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறான். உனக்கும் யாரும் இல்லை, அவனுக்கும் அப்பா அம்மா இல்லை. அவனுக்கு உன்னை
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 05 - சசிரேகா
”இவளோட அண்ணன் சரண் இங்க இந்த வீட்ல தங்கப் போறானாம். அவனோட டீலிங்கிற்காக என் அப்பா சித்தப்பா அப்படியே இழையறாங்க. ஒருவேளை அந்த டீலிங்கை காட்டி சரண்யாவை என் தலையில கட்டிவைச்சிடுவாங்களோன்னு பயமா இருக்குடா” என தேவா தாஸிடம் சொல்ல அங்கு சரண்யாவோ தன் தாத்தாவிற்கு போன் செய்து ”தாத்தா எனக்குத் தெரியாது
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
சுந்தரம் அன்னிக்கு நீ சூழ்ச்சி செஞ்சி எங்களை பிரிச்ச ஆனா, இன்னிக்கு தாமரை என்ன சொன்னாள்னு பார்த்தியா, நான் இருக்கறவரைக்கும் தேவாவோட காதல் தோக்காது, நான் ஏமாந்த மாதிரி அவன் ஏமாறமாட்டான். நான் செத்தாலும் தேவாவையும் கீர்த்தனாவையும் நான் சேர்த்து வைச்சிடுவேன். என் காதலை நீ பறிச்சல்ல, இன்னிக்கு
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 07 - சசிரேகா
“விக்ரம் என் எதிரியாயிருந்தா நான் டீல் பண்ற விதமே வேற, விக்ரம் என் நண்பன், பக்குவமா நடந்துக்கப் பார்க்கறேன், அவன் ஏற்கனவே வேலை கிடைக்காத துயரத்தில தற்கொலை செஞ்சிக்க பார்த்தவன், நான் காப்பாத்தி என்கிட்ட இருக்கற ஒர்க்ஷாப்ல வேலைக்கொடுத்தேன். உன்னால அவன் மறுபடியும் தற்கொலை பண்ணிக்கிட்டா என்னாகிறது,
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 08 - சசிரேகா
ஏகப்பட்ட பிரச்சனைகளோட அந்த பொண்ணை கல்யாணம் பண்ணா உன் குடும்ப வாழ்க்கையில கஷ்டங்களும், வேதனைகளும், கோபதாபங்களும்தான் இருக்கும். இதே நீ நினைச்ச ஹாஸ்டல நீ கட்டிட்டு எல்லார் வாயையும் அடைச்சிட்டு முறையா உன் வீட்டோட சம்மதத்தோட அவள் கையை பிடிச்சேன்னா அவளுக்கும் கௌரவமா இருக்கும், இப்படி ஓடிப்போய்
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 09 - சசிரேகா
10 நிமிடம் பேசியும் சரண்யா அங்கிருந்து செல்லாமல் இருக்கவே அதிர்ந்த அனைவரும் என்ன செய்வது என ஆளுக்கு ஆள் பேசலானார்கள். சரண்யாவிற்காக அவளது தாத்தா வைத்தியின் காலில் விழ அவருக்கு கஷ்டமாகிப் போனது. வேறு வழியின்றி தேவாவிடம் பேசி சமாதானம் செய்யப் போக கீர்த்தனா எழுந்துக் கொண்டாள். அவளை தாமரை சமாதானம்
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 10 - சசிரேகா
”என்னை காதல் பண்ணும்மா உன் முன்னாடிதானே நிக்கறேன் எங்க உன் ஆத்மார்த்தமான காதலை காட்டு பார்க்கலாம் நானும் தெரிஞ்சிக்கிறேன். இவளோ கலவரம் செஞ்சி சண்டை போட்டு பாவம் உன் தாத்தா எவ்ளோ பெரிய மனுசன் உனக்காக எல்லார் கால்லயும் விழுந்து எப்படியோ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட, அவ்ளோ உன்னதமான உன்னோட காதல்
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 11 - சசிரேகா
வீட்லயும் நான் கீர்த்தனாவோடதானே இருக்கேன், பார்க்கறாள்ல தியேட்டர்ல மட்டும் என்னவாம், அப்படியே அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதானே அப்படி கஷ்டமாயிருந்தா இப்பவே டைவர்ஸ் பண்ணிட்டு போகச் சொல்லு இல்லை தாலியை கழட்டிட்டு அவள் தாத்தா கிட்ட போயிட சொல்லு” என தேவா சொல்ல சரண்யா உடனே அதிர்ச்சியுடன் தேவாவை
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 12 - சசிரேகா
இதோ சரண்யாவை எடுத்துக்க அவள் காதலுக்காக கஷ்டப்பட்டு ரெண்டாவது மனைவின்னாலும் சரின்னு உன் கை பிடிச்சா, கீர்த்தனாவை பாரு நீ இல்லைன்னாலும் விக்ரம் கூட வாழக்கூடாதுன்னு எல்லாரையும் விட்டுட்டு தனியா அநாதை ஆசிரமத்தில போய் சேர்ந்துட்டா ஆனா, நான் என்ன செஞ்சேன் கீர்த்தனாவை போல தனியா வாழாம, சரண்யாவை போல
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 13 - சசிரேகா
”அடிப்பாவி தாமரை என் தாத்தா மடியிலதான் நீ சாகனும்னு இருந்தியா, இதுக்குத்தான் இத்தனை நாள் உயிரை காப்பாத்தி வைச்சியா இது தெரியாம நான் அப்படி பேசிட்டேனே, நான் அமைதியா இருந்திருந்தா இன்னும் நீ இருந்திருப்பியா நான்தான் தப்பு என் மேலதான் தப்பு” என சத்தமாக சொல்லிவிட்டு தன் தாத்தாவிடம் ”தாத்தா நான்தான்
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 14 - சசிரேகா
நான் உன்னை லவ் பண்ணலை, அதை நீ புரிஞ்சிக்கமாட்டேங்கற உன் பிடிவாதத்துக்கு என்னை பலிகொடுக்க நினைச்சா அது உன்னால முடியாது. கட்டாயப்படுத்தி உன்மேல காதலோ, மோகமோ எனக்கு வராது. இதே உனக்கு பிடிக்காதவன் உன் கையை பிடிச்சி இழுத்தா நீ சரிம்பியா, நம்ம விக்ரமை எடுத்துக்க அவன் உன் கையை பிடிக்கறான் உனக்கு ஓகேவா
... -
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 15 - சசிரேகா
”சரண்யா தன்னோட ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டா, நம்மளை பிரிக்க பார்க்கறா, அவளுக்கு துணையா இருக்கற மாதிரி நான் நடிக்கிறேன் நீயும் நடிச்சி வை என்னதான் செய்றாள்ன்னு பார்க்கறேன், அவளுக்கு நான் உன்னை பழிவாங்கினாதான் என்கூட வாழ்வா போல” என எழுதி அனுப்ப சில நொடிகள் கழித்து தேவாவிடம் இருந்து பதில் மெசேஜ் வந்தது
...