(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 03 - சசிரேகா

  

தேவநாதனின் வீடு

   

காலையில் எழுந்த உடன் தாஸ் சுற்றி முற்றி பார்த்து விட்டு தனது பாக்கெட்டில் லெட்டர் இருக்கிறதா என செக் செய்தான். லெட்டர் இருக்கவும் நிம்மதியானவன் உடனே தேவநாதன் நினைப்பு வரவே எழுந்து அவன் அறைக்குச் சென்றான். அதற்குள்ளாகவே சீக்கிரமாகவே எழுந்து ரெடியாகி தயாராக இருந்தவனிடம் குழப்பத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு கேள்வியுடன் என்ன இது என்பது போல் தாஸ் கேட்க அதற்கு தேவனோ

   

”என்ன தாஸ் நல்ல தூக்கம் போல மணி 8 ஆகுது இப்பதான் எழுந்து வர்றியா” என கேட்க தாஸ் உடனே சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்துவிட்டு தலையில் கை வைத்தவன் தேவன் எங்கோ செல்வதைக் கண்டு அவனிடம்

   

”எங்க போற” என்பது போல் சைகை செய்ய

   

”கோயிலுக்குதான் நீ வரலையா ஓ நீ இன்னும் குளிக்கலையா சரி சரி சீக்கிரமா குளிச்சிட்டு வந்து சேரு நான் முன்னாடி போறேன்” என சொல்ல தாஸ் தடுத்தான்.

   

”என்னடா” என தேவா கேட்க அதற்கு தாஸ்

   

”நானும் வரேன் இரு” என்பது போல் சைகை செய்ய

   

”நீ வர லேட் ஆகும் நீ இரு” என சொல்ல உடனே அவன் தன் பாக்கெட்டில் இருந்த லெட்டரை அவனிடம் நீட்டி படி என்பது போல் சைகை செய்ய அவனோ மணியை பார்த்துவிட்டு கீர்த்தனாவின் நினைப்பில்

   

”வந்து படிக்கிறேன்டா நான் கிளம்பறேன் நீயே இதை பத்திரமா வைச்சிக்க” என அந்த லெட்டரை வாங்கி அவனது பாக்கெட்டிலேயே வைத்துவிட்டு வேகமாக கோயிலுக்குச் சென்றான். அவன் போகும் வேகத்தைக் கண்ட தாஸுக்கு முதலில் புரியாமல் போனாலும் பின் கீர்த்தனா நேற்று சொன்னது நினைவுக்கு வரவே அரக்க பரக்க குளிக்கச் சென்று காக்கா குளியல் போட்டு ஒரு வழியாக ரெடியாகி கையில் லெட்டருடன் அறையை விட்டு வெளியே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.