அவள் நடந்து வரும் போதே அவளது பாத கொலுசொலி அவனுக்கு இனிமையான இசையை காதில் ஓட்டியது. அவள் அணிந்திருந்த பச்சை பார்டர் வைத்த சிவப்பு பாவாடையும், பச்சை தாவணியும், அவளது விரிந்த கூந்தலில் சூடியிருந்த மல்லிப்பூ சரமும் எளிமையான மேக்கப்பும் இயல்பான அழகும் அவனை அப்படியே அடித்து சாய்த்தது.
”எவ்ளோ நேரம் உங்களை தேடறது நீங்க என்னடான்னா மரத்துக்கு கீழ உட்கார்ந்திருக்கீங்க” என கேட்க அவன் அதைக்கேட்டுச் சிரித்தான்.
”நான் சொல்ல வேண்டியத நீ சொல்ற”
“அப்படின்னா“
“இவ்ளோ நேரம் உன்னை தேடிட்டு இப்பதான் இங்க வந்து சேர்ந்தேன். நீ டைம் சொல்லியிருக்கனும் ஏன் லேட்டு“
”சாரி என் கூட பவி வரேன்னு சொன்னா அதான் காலையில அவளோட ஒரு முறை கோயிலுக்கு வந்து சுத்திட்டு திரும்பவும் உங்களுக்காக இங்க வந்தேன்”
”முதல் முறை வந்தப்பவே என்னை நீ தேடியிருப்பியே”
“பவி கூட உங்களை தேடினா நீங்கதான் இல்லை” என சந்தோஷமாகச் சொல்ல அவனுக்கு சிரிப்பே வந்தது.
”உன் போன் நெம்பர் கொடு” என கேட்க அவள் அவசரமாக தன் நெம்பரை சொல்லவும் அவன் சிரித்துக் கொண்டே அதை தன் போனில் டைப் செய்து கீர்த்தனா என்பதற்கு பதிலாக ஒய்ப் என சேவ் செய்து அதை பத்திரமாக பாக்கெட்டில் வைத்துவிட்டு அவளைப் பார்த்தான். அவளோ அவனையே குறுகுறுவென பார்க்கவே
”என்ன அப்படிப் பார்க்கற”