(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”எதனால பாட்டி இந்த முடிவுக்கு வந்தாங்க” என கேட்க தாஸ் உடனே சைகை செய்ய அவனோ

   

”நான் அவளை கூட்டிட்டு வந்தது பார்த்து லவ்வுன்னு நினைச்சி, அவள் வீட்டை விட்டு ஓடி வந்ததா முடிவு பண்ணாங்களா டேய் இது அநியாயம்டா அவளை வீட்ல தங்க வைக்க ஏற்பாடு பண்ணது என் அப்பா, நான் இல்லை இந்த விசயத்தை சரண்யா சொல்லலையா” என கேட்க தாஸ் இல்லை என  தலையாட்டவும் தேவா தலையில் கையை வைத்தான்

   

”என்னடா இது இப்படியெல்லாம் பிரச்சனை வருது. முதல்ல பாட்டிகிட்ட பேசியாகனும் வா வா வீட்டுக்கு போகலாம் வா” என அழைக்க தாஸ் தன்னிடம் இருந்த லெட்டரை அவனிடம் தர அவனோ அதை வாங்காமல்

   

”இதை அப்புறமா படிக்கிறேன் முதல்ல சரண்யா பிரச்சனையை முடிக்கறேன் நீ வாடா” என இழுத்துக் கொண்டு அவசரமாக வீடு நோக்கிச் சென்றான். வழியில் பவியிடம் சிக்கினான்

   

”மாமா” என ஆசையாக வந்தவளை நிப்பாட்டினான்

   

”மாமான்னு கூப்பிடாத பவி” என அதட்ட அவளோ 

   

”மாமா வாங்க மாமா வீட்டுக்கு வாங்க”

   

“எதுக்கு”

   

“அட வாங்க மாமா” என அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.

   

அங்கு காலையில் கீர்த்தனாவும் பவியும் டிபன் செய்திருந்தார்கள். வேண்டுமென்றே ஒரு போட்டி போல வெண்பொங்கலை இருவரும் தனித்தனியாக செய்து வைத்தார்கள்.

   

வீட்டுக்குள் சென்றதும் டைனிங் டேபிளில் விக்ரம் தன் பாட்டியுடன் அமர்ந்து இருந்தான் எதிர்பக்கம் கீர்த்தனா அமைதியாக நின்றிருந்தாள், தேவா வரவும் அவளது முகம் பூ பூவாய் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.