(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“அதெல்லாம் முடியாது ப்ளீஸ் சொல்லுங்க, ஒருவேளை தெரிஞ்சவங்க பேர்ல என் நெம்பர் போட்டு சேவ் பண்ணீங்களா”

   

“சே சே இல்லையே”

   

“அப்ப என்ன சேவ் பண்ணீங்க சொல்லுங்க” என அவள் கோபமாக அடம்பிடித்து கேட்க அவளது செல்லக் கோபத்தை இன்னும் அதிகப்படுத்த எண்ணி

   

”சொல்ல மாட்டேனே” என அவன் சிரித்துக் கொண்டே செல்ல அவளுக்கு கோபமே வந்தது. அவனது மேல் பாக்கெட்டில் இருந்த செல்போனை பார்த்து சிரித்தவள் அவனிடம்

   

”நீங்க சொல்லவே வேணாம் நானே பார்த்து தெரிஞ்சிக்குவேன்” என சொல்லி உடனே அவன் பாக்கெட்டில் இருந்த செல்போனை பிடுங்க கை நீட்ட அதைத் தடுத்து பாக்கெட்டை இறுக்கமாக மூடிவிட்டு தேவா

   

”ஓய் இது தப்பு இது கோயில் என்கிட்ட இப்படி நடந்துக்காத”

   

“அதுதான் கோயில், இது தோப்பு, இங்க எப்படி வேணும்னாலும் நடந்துக்கலாம் கொடுங்க செல்பொனை கொடுங்க, தப்பா ஏதாவது பேர் போட்டு சேவ் பண்ணிட்டீங்களா பேய் பிசாசுன்னு” என அவனது கையை தட்டிவிட முயல

   

“சே சே அப்படியெல்லாம் இல்ல”

   

“அப்புறம் என்ன பேர் வைச்சீங்க ஏஞ்சல்னா”

   

“ம்ஹூம்”

   

“செல்போன் காட்டுங்க” என செல்போனை பிடுங்க வர அவனோ சிரித்தபடியே அவளிடம்

   

”முடியாது சொன்னாக் கேளு யாராவது பார்த்தா பிரச்சனை விளையாடாத தள்ளி உட்காரு” 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.