Page 6 of 41
“இல்லை என் நெம்பர் சேவ் பண்ணப்ப சிரிச்சிட்டே சேவ் பண்ணீங்களே என்ன பேர் வைச்சி சேவ் பண்ணீங்க”
“எதுக்கு கேட்கற”
“தெரிஞ்சிக்கலாம்னுதான் சொல்லுங்க என் பேர் போட்டு சேவ் பண்ணீங்களா“
“உன் பேரா இல்லையே” என்றான் தேவா சிரித்தபடியே
”அப்போ முதல் எழுத்து அதான் கேன்னு சேவ் பண்ணீங்களா”
”ம்ஹூம்”
“அப்போ ப்ரெண்ட்டுன்னு சேவ் பண்ணீங்களா”
”நீ எனக்கு ப்ரெண்டா” என அவன் கோபமாகக் கேட்க
”இல்லை இல்லை பிரெண்ட்டுன்னா கேர்ள் ப்ரெண்ட் அப்படின்னு சொன்னேன்”
“இல்லை அப்படி சேவ் பண்ணலை”
“பவியோட பிரெண்ட்ன்னு சேவ் பண்ணீங்களா”
“ம்ஹூம்”
”அப்ப என்னன்னு சேவ் பண்ணீங்க”
“ம் எதுக்கு சொல்லனும் எப்படியோ சேவ் பண்ணேன் விடேன்”