”அவள் என் தங்கச்சி, நீ தள்ளியிரு” என்பது போல் சைகை செய்ய
”உன் தங்கச்சிதான், நான் அவளை எதுவும் செய்யலைடா, சும்மா பேசிட்டு விளையாடிட்டு” என அவன் சொல்ல தாஸோ அதை ஒப்புக் கொள்ளாமல் கீர்த்தனாவை வீட்டுக்கு போகும் படி சைகை செய்ய அவள் தேவாவை பார்த்துவிட்டு உடனே அங்கிருந்து ஓடிவிட்டாள். அவள் சென்றதும் தாஸிடம் தப்பிக்க மெதுவாக நடக்க முயன்றவனை தடுத்தான் தாஸ்
”என்னடா நண்பா” என பாசமாக கேட்க அவனோ முறைத்துவிட்டு அவனிடம்
பிளைட், வீடு என பலவகையான சைகைகள் செய்ய தேவாவோ
”சரண் பையனை பார்க்க போகனுமா”
”இல்லை” என அவன் தலையாட்டிவிட்டு வேறு ஒன்று செய்து காட்ட
”சரண் தங்கச்சி சரண்யா வீட்ல இருக்கா அவளுக்கென்ன” என கேட்க தாஸ் அவனிடம் பாட்டியின் போக்கை விவரிக்க சைகை செய்ய
”புரியலைடா” என சொல்ல அவனோ சட்டென தனது செல்போனில் மெசேஜ் போல எதையோ டைப் செய்து அவனுக்கு சென்ட் செய்ய உடனே தேவாவின் செல்போனில் மெசேஜ் டோன் அடிக்கவே அவன் அதை எடுத்துப் பார்த்தவன்
”பாட்டி உனக்கும் சரண்யாவுக்கும் கல்யாணம் பேசறாங்க” என எழுதியிருக்கவே அதிர்ந்தான்
”என்னடா சொல்ற நீ”
அவனோ அவனது தலைமீதே சத்தியம் செய்து ஆமாம் என சொல்ல தேவாவிற்கு தர்மசங்கடமாகிப் போனது