“பவி என்ன சின்ன குழந்தையா அவளை விடு, இப்படி நீ செல்லம் கொடுத்தா உன்னாலயே அவள் கெட்டுப்போவா நீ சாப்பிட்டல்ல போ ஒர்க்ஷாப்புக்கு” என சொல்ல விக்ரம் எழவும் பாட்டியிடம்
”பாட்டி நீங்க பவியை சமாதானம் செய்ங்க” என சொல்ல அவரும் பவியை தேடிச் செல்ல அமைதியாக ஓரமாக நின்றிருந்த கீர்த்தனாவைக் கண்ட தேவா அவளிடம்
”கீர்த்தனா வா வந்து பரிமாறு” என சொல்ல அவளும் வந்து பரிமாறினாள். தாஸுக்கும் பரிமாறிக் கொண்டே
”சாரிண்ணா வேணும்னே அப்படி நடந்துக்கல” என அவள் குற்ற உணர்ச்சியில் சொல்ல தாஸ் உடனே சிரித்து பரவாயில்லை என்பது போல் சைகை செய்துவிட்டு பொங்கலை சாப்பிட்டு முடித்தான். தாஸின் கோபம் தணிந்ததைக்கண்டு தேவாவும் சாப்பிட்டு முடித்து எழுந்து கைகழுவ செல்ல அதற்காக தன் செல்போனை டைனிங் டேபிளில் தெரியாத்தனமாக வைத்து விட்டு சென்றான்.
கிச்சனுக்கு சென்ற தாஸ் முதலில் அங்கிருந்த சிங்கில் கைகழுவிவிட்டு வெளியே வர அடுத்து தேவா சென்றான். அதற்குள் அவனது செல்போனை ஒளித்து வைத்தாள் கீர்த்தனா. தேவா வரவும் தாஸ் போலாமா என சைகை செய்ய
”போலாம்“ என சொல்லி முன்னேறி நடந்தவனைக் கண்டு தாஸ் உடனே வீட்டை விட்டு வெளியேற தேவாவோ தன் செல்போன் இல்லாமல் போகவே டேபிளில் தேடி அங்கு கிடைக்காமல் போகவும் கீர்த்தனாவை தேட அவள் இல்லாமல் போகவும் சிரித்துக் கொண்டே கிச்சனுக்குச் சென்றான். அங்கு செல்போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த கீர்த்தனாவைக் கண்டு யாராவது வருகிறார்களா என சுற்றி முற்றி பார்த்துவிட்டு 4 எட்டில் கீர்த்தனாவிடம் சென்று
”ஓய் என் செல்போன் வைச்சி என்னை செய்ற”
“நான் பார்த்துட்டேன்”