(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”நீ ஏன் கஷ்டப்பட்டு வேலை செய்யனும்” என கேட்க அவள் அவனை வித்தியாசமாகப் பார்த்தாள்

   

”படிச்ச படிப்புக்கு ஏதாவது செய்யனும்னு நினைக்கறா அது தப்பா” என சற்று காட்டமாக கேட்ட தேவாவைக் கண்டு சற்று அமைதியான விக்ரம்

   

”சாரிண்ணா நான் அப்படி சொல்லலை எதுக்கு கஷ்டம்னுதான்”

   

“நான் யாரையாவது கஷ்டப்படுத்தி நீ பார்த்திருக்கியா”

   

“அய்யோ அண்ணா நான் உன்னை சொல்லலை”

   

“இதப்பாரு அவள் 1 மாசத்துக்கு கேட்டா நான் சரின்னு சொன்னேன், இன்னும் நான் வேலையே கொடுக்கலை இனிமேதான் இன்டர்வியூ எடுத்து முடிவு சொல்லனும், அவளுக்காக நீ ஏன் இப்படி எல்லாம் பேசற சரி உன் தங்கச்சி எங்க கூப்பிடு அவளை அவளுக்கும் ஒரு வேலை தரேன் செய்றாளான்னு பார்க்கலாம்”

   

“கண்டிப்பா தாங்கண்ணா செய்வா”

   

”அவளுக்கு ஒரு நியாயம் இவளுக்கு ஒரு நியாயமா என்னாச்சி விக்ரம் உனக்கு” என கேட்க அவனோ 

   

”சாரிண்ணா” என வழியவும் தேவா அவனிடம்

   

”இதப்பாரு படிச்சிட்டு வெட்டியா இல்லாம வேலை செஞ்சா அனுபவமும் மெச்சூரிட்டியும் கிடைக்கும், சும்மா சமையல் பரவாயில்லைன்னு சொன்னதுக்கு அழுதுக்கிட்டு ஓடிட்டா உன் தங்கச்சி இப்படி இருந்தா எப்படி கல்யாணம் பண்ணி நல்லபடியா குடும்பம் நடத்துவா உன்னோட அதீத செல்லத்தால அவளும் கஷ்டப்பட்டு அதைப் பார்த்து நீயும் கஷ்டப்படப் போற பாரு” என சொல்ல

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.