”கண்டிப்பா நான் செய்றேன்“
“அப்புறம் ஒரு விசயம் எனக்கு பெரிசா கணக்கு வழக்கு தெரியாது அதனால சந்தேகம் வந்தா விக்ரமை கேளு அப்படியில்லைன்னா அக்கவுண்ட் மேனேஜர் இருக்காரு அவர்கிட்ட கேளு.”
“மாமா ஏற்கனவே மேனேஜர் இருக்கறப்ப எதுக்கு நானு“
“அவரால முடியலை. நிறைய வேலைங்கறதால ஆள் தேவைன்னு சொன்னாரு புரியுதா”
“புரியுது மாமா”
“நல்லது. அப்புறம் அதை ஆபிஸ்ல இருந்து செய்யனும்னு அவசியம் இல்லை. உன் வீட்ல கூட நீ செய்யலாம், அங்க லாரி ட்ரான்ஸ்போர்ட் ஆபிசில நிறைய ஆம்பளைங்க இருப்பாங்க போவாங்க, வருவாங்க உனக்கு கஷ்டமா இருக்கும் அதனால நீ வேலையை கத்துக்கிட்டு வீட்ல போய் செய்ய ஆரம்பி”
“இங்க எந்த வேலையும் இல்லையா மாமா“
“ஏன் கேட்கற?”
“இங்க யாரும் வரமாட்டாங்கள்ல”
“இங்க எந்த வேலையும் இல்லை, நானே இங்க அவ்வளவா வரமாட்டேன் ஒண்ணு ஒர்க்ஷாப்ல இருப்பேன் இல்லைன்னா வெளிய கட்டுமான இடத்தில இருப்பேன். அந்த ஆபிசுக்கு நான் வரலைன்னாலும் வேல ஒழுங்கா நடக்கும்”
“ஓ சரி மாமா” என அவள் எழுந்துக் கொள்ள விக்ரமிடம்
”விக்ரம் ஜாக்கிரதை பொறுமையாவே கணக்கு பார்க்கட்டும், 1 மாசம் டைம் இருக்கு சரியா”