”உள்ள வா” என தேவா குரல் தர கீர்த்தனா உள்ளே வந்தாள். கையில் பைலுடன் அவன் முன் நின்றாள்.
அவளையே ஏற இறங்கப் பார்த்தான்.
”குட்மார்னிங் சார்” என்றாள். அதைக்கேட்டு சிரித்தவன்
”சார்லாம் வேணாம்”
“வேற எப்படி கூப்பிடறது”
“ம் மாமான்னு கூப்பிடு, பவி கூப்பிடறாளே அப்படி” என சொல்ல அவள் வெட்கப்பட்டு முடியாது என தலையாட்ட
”சரி உன் விருப்பம் போல கூப்பிடு, ஆனா பேர் வைச்சி கூப்பிடாத, தப்பித்தவறி உன் அண்ணன் தாஸ் காதுல விழுந்தா உன் மேல கோச்சிக்குவான்” என சொல்ல அவள் அழகு காட்டிச் சிரித்தாள்
”உட்காரு” என சொல்ல அங்கிருந்த சேரில் அமர்ந்து அவளிடம் இருந்த ஃபைலை டேபிள் மீது வைத்தாள்
”என்ன இது” என ஃபைலை பார்த்து கேட்க
”சர்டிபிகேட் இருக்கு இந்தாங்க”
“அது இருக்கட்டும் ஏன் லேட்டு”
”அதான் சொன்னேனே பவியும் விக்ரமும் வந்தாங்களா நான் ஒளிஞ்சிக்கிட்டேன்”