“ஏன் உன் அப்பா அம்மா என்ன ஆனாங்க”
“இருக்காங்க ஆனா அவங்க என்னை பெத்தவங்க இல்லை”
“புரியலை”
“என்னோட அம்மாவுக்கு குழந்தை பிறக்கலைன்னு என்னை எடுத்து வளர்த்தாங்க. அப்புறம் 5 வருஷங்கள் கழிச்சி அவங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவும், என்னை ஹாஸ்டல்ல விட்டுட்டாங்க வெறுமே நாங்க கார்டியன்ங்கதான், உன் சொந்த அப்பா அம்மா இல்லைன்னு சொன்னாங்க” என சொல்லி அவள் கண்கலங்கி தழுதழுக்க பேச தேவா உடனே எழுந்து அவளிடம் வந்தான்.
”அழாத” என அவளது தோளைத் தொட அவளோ
”என்னோட சொந்த அம்மாகிட்டயிருந்து என்னை பிரிச்சி வளர்க்க ஆசைப்பட்டவங்க அவங்களுக்குன்னு குழந்தை வரவும் என்னை விரட்டிட்டாங்க, என்னால அதை தாங்க முடியலை நான் ஒரு அநாதை எனக்குன்னு யாரும் இல்லை” என சொல்ல தேம்பி தேம்பி அழவும் தேவாவோ அவளை எழுப்பி நிற்க வைத்து தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு அவளது முதுகை தடவிக் கொடுத்து இன்னொரு கையால் அவளது கண்ணீரை துடைத்தை விட்டவன்
”யாரும் இல்லைன்னு ஏன் சொல்ற, நான் இருக்கேன்ல லேட்டா வந்தாலும் சரியான நேரத்தில உன் கிட்ட வந்திருக்கேனே அப்புறம் என்ன அழாத, போனவங்களை விடு இருக்கறவனை ஏத்துக்க” என சொல்ல அவளின் அழுகை மெல்ல மெல்ல குறைந்தது தன்னையும் அறியாமல் கீர்த்தனா அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள தேவாவிற்கு முதலில் அவள் வேதனையில் இருப்பதாக தெரிந்தது. பின்பு அவளின் இறுக்கம் மேலும் அதிகமாகவே கூச்சத்தில் நெளிந்தான் தெவா
”கீர்த்தனா என்ன செய்ற என்னை விடு, எனக்கு கூச்சமா இருக்கு” என சொல்ல அவளோ
”முடியாது” என கொஞ்ச தேவாவிற்கு சிரிப்பு வந்தது