(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”சரிங்கண்ணா”

   

“அவளுக்கு துணையா இருடா விட்டுடாத, ஒர்க்ஷாப் வேலைக்கென்ன வேற யாராவது கூட செய்வாங்க, நீ அப்பப்ப போய் அதை கவனிச்சிக்க, 1 மாசத்துக்குதான் இப்படி இருக்கும் கணக்கு வழக்கு சரியா போச்சின்னா அப்புறமா ப்ரீதான்”

   

“சரிண்ணா நான் பார்த்துக்கறேன் அண்ணா” என சொல்லி பவியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். 

   

நேரத்தைப் பார்த்தான் தேவா மணி 10.15 என காட்டவே கீர்த்தனாவை நினைத்து குழம்பியவன் அவளது நெம்பருக்கு போன் செய்தான்.

   

”ஹலோ” என தேவா பேச அவளோ

   

”ஹலோ” என ஹஸ்கி வாய்சில் பேச

   

”ஏன் சைலன்டா பேசற என்னாச்சி இன்டர்வியூக்கு வரலையா”

   

“நான் அங்கதான் வந்தேன். அந்நேரம் பவியும் விக்ரமும் ஆபிசுக்குள்ள போறதை பார்த்து வெளிய நின்னுட்டேன். அவங்க போயிட்டாங்களா நான் வரலாமா“

   

“அவங்க வந்ததுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் நீ வரவேண்டியதுதானே”

   

“இல்லை அந்த பவி ஏற்கனவே நீங்க சொன்ன சமையல் விசயத்தில ரொம்ப அப்செட் ஆயிட்டா, இதுல திரும்பவும் என்னால அவளுக்கு கஷ்டம் வரக்கூடாதுன்னுதான் வராம இருக்கேன்”

   

“அவங்க போயிட்டாங்க நீ வா” என சொல்லி போனை வைக்கவும் அடுத்த 5வது நிமிடம் அவனது ஆபிஸ் அறைக்கதவு தட்டப்படவும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.