(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“இவ்ளோ பயந்தாகொள்ளியா நீ”

   

“அப்படியில்லை நான் அவங்க வீட்ல தங்கறேன்ல, ஏதாவது சின்னதா அவங்களுக்கு என் மேல சந்தேகமோ, வெறுப்போ வந்துட்டா நான் இந்த ஊரை விட்டு போக வேணடியிருக்கும் அதான் பார்க்கறேன்” என சொல்ல 

   

”இங்க வேலையில சேர்ந்தபின்னாடி அவங்க வீட்ல தங்கனும்னு அவசியம் இல்லை என் வீட்ல கூட நீ தங்கலாம்”

   

“பரவாயில்லை பவி கோச்சிக்குவா”

   

“அப்ப நான் கோச்சிக்கிட்டா பரவாயில்லையா”

   

“பரவாயில்லை” என அவள் சொல்லிச் சிரிக்க

   

”நல்லாவே சிரிக்கற சரி இன்டர்வியூ ஆரம்பிக்கலாமா” என கேட்க அவளும் உடனே விரைப்பாக அமர்ந்துக் கொண்டு சரியென தலையை பலமாக ஆட்ட அவளின் செயலைக் கண்டு சிரித்தான்

   

”நான் என்ன ஆர்மீக்கா வேலை எடுக்கறேன், நிமிர்ந்து உட்கார்ற ரிலாக்ஸா உட்காரு” என சொல்ல அவளும் சேரில் சாய்ந்துக் கொண்டு அமர்ந்தாள்

   

”உனக்கு இதுக்கு முன்னாடி பாய் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களா” என கேட்க அவள் சிரித்தபடியே

   

”காலேஜ்ல படிக்கறப்ப கூட படிக்கற பையன்கள் பழக்கம் ஆனா யாரையும் நான் பாய் ப்ரெண்டா நினைச்சதில்லை அப்படி பழகினதும் இல்லை”

   

”இதுக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணியிருக்கியா”

   

“இல்லை”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.