(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“சரிங்க” என அவள் சொல்ல விக்ரமோ

   

”அண்ணா எதுக்கு இவ்ளோ கண்டிப்பா சொல்றண்ணா, முன்ன பின்ன பதில் சொன்னாலும் பரவாயில்லைன்னு வேலையை கொடுண்ணா”

   

“அவளுக்கு நீ சிபாரிசு பண்றியா உனக்குத் தெரியும்ல நான் இந்த சிபாரிசுக்கு மயங்கறவன் இல்லைன்னு, நீ எனக்கு நண்பன்தான் அந்த லிமிட்லயே இரு, இப்படி வர்ற போறவங்களுக்காக பரிஞ்சி பேசி வேலை வாங்கி தந்து என்னை பிரச்சனையில இழுத்துவிடாத, முதல்ல உன் தங்கச்சியை சரி பண்ணு இப்படியே தொட்டத்துக்கெல்லாம் தொட்டாச்சிணுங்கி போல அழுது வடிஞ்சா அக்கவுண்ட்ஸ் ஒழுங்கா பார்த்த மாதிரிதான்”

   

“இல்லைண்ணா நான் பார்த்துக்கறேன அண்ணா” என சொல்ல தேவா அங்கிருந்து வெளியே வர அவர்கள் பேசுவதை தாஸ் கேட்டுக் கொண்டே இருந்தான். தேவா வரவும் அவனை சந்தேகமாக பார்க்க அவனோ

   

”என்னடா” என கேட்க அவன் பதில் சொல்லாமல் ம்ஹூம் என தலையாட்டிவிட்டு வெளியே செல்ல அவன் பின்னாடியே சென்றான்.

   

தேவா வீட்டுக்குள் சென்றதும் பாட்டியை தேட அவரோ சரண்யாவுடன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றிருப்பதாக தகவல் வரவும் தாஸிடம்

   

”பாட்டி வீட்ல இல்லைடா இப்ப என்ன செய்றது சரி வா நாம ஆபிஸ்க்கு போலாம், மதியம் வந்து பாட்டிகிட்ட விளக்கமா சொல்லிடலாம் மதியம் அப்பாவும் இருப்பாரு. அப்படியே வீட்ல எல்லார்கிட்டயும் சரண்யாவை பத்தி விளக்கமா சொல்லிடலாம் வா” என அவனை அழைத்துக் கொண்டு நேராக தன் கன்ஸ்டரக்ஷன் ஆபிசுக்குச் சென்றான்.

   

ஆபிசுக்குள் சென்றதும் மணியை பார்க்க அது 9.55 என காட்டவும் கீர்த்தனாவின் வரவிற்காக ஆவலாக காத்திருந்தான். அதற்குள் தாஸை அனுப்பிவிட முடிவு எடுத்தவன் அவனிடம்

   

”தாஸ் நம்ம அக்கவுண்ட் பைல் எல்லாம் எங்க இருக்குன்னு தெரியும்ல“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.