“எதை”
“ம் இதை” என அவள் செல்போன் திரையை காட்ட அதில் அவளது நெம்பரை ஒய்ப் என சேவ் செய்திருப்பதைக் கண்டு சிரித்தவன்
”சரி கொடு” என கேட்க அவள் செல்போன் நீட்ட
”நான் இதை கொடுக்க சொல்லலை”
“பின்ன”
என அவள் கேட்க அவனோ உதட்டை சுருக்கி முத்தம் தருவது போல செய்து காட்ட அவளோ வெட்கத்துடன் தலை குனிந்து ம்ஹூம் என்றாள். அதற்குள் அங்கு விக்ரம் வருவதைக் கண்டு சட்டென பேச்சை மாற்றினான தேவா
”சரியா 10 மணிக்கு உனக்கு இன்டர்வியூ இருக்கு, நேராக என்னோட கன்ஸ்ட்ரக்ஷன் ஆபிசுக்கு வந்துடு, வரும் போது உன் சர்டிபிகேட் கொண்டாந்துடு பார்க்கலாம் உன்னோட திறமையை வைச்சித்தான் என்னால வேலை தர முடியும் புரியுதா” என சொல்ல விக்ரம் வரவும் சரியாக இருந்தது.
”அண்ணா என்ன விசயம் யாருக்கு வேலை தரப்போறீங்க” என கேட்க அதற்கு கீர்த்தனா விக்ரமிடம்
”நான்தான் சும்மாயிருக்கறதுக்கு வேலை வேணும்னு கேட்டேன். என் ஊர்ல வேலை தேடிப்போனா முன்அனுபவம் இருக்கான்னு கேட்கறாங்க, ஒரு மாசத்துக்கு இவர்கிட்ட வேலைக்கு சேர்ந்து நல்லா கத்துக்கிட்டு ஊருக்கு போய் வேலை தேடினா நிச்சயம் கிடைக்கும்னு நம்பறேன் அதான் இவர்கிட்ட வேலை கேட்டேன் அவரும் இன்டர்வ்யூ வர சொன்னாரு அதான்“ என அவள் பேச விக்ரமோ