”சாரிண்ணா அவளை விட்டா எனக்கு வேற யார் இருக்கா அதான் இப்படி சரிண்ணா அவளுக்கும் வேலை கொடு நான் மறுக்கலை ஆனா என்ன வேலை தருவ”
“அவள் எம்பிஏ படிச்சவதானே”
“ஆமாம்ணா”
“அக்கவுண்ட்ஸ் பார்ப்பாளா”
“தெரியலை விசாரிக்கறேன்”
“சரி லாரி ட்ரான்ஸ்போர்ட் வரவு செலவுகளை பார்க்கச் சொல்லு அதுக்காக ஆபிசுக்கு வரவேணாம், இங்க வீட்ல இருந்துக்கிட்டே செய்ய வை நீயும் கொஞ்சம் அவளுக்கு உதவி பண்ணு அடுத்த மாசம் ஆடிட்டிங் நடக்கும் அப்ப சரியான கணக்கு வழக்கு காட்டி வரி கட்டனும்”
“சரிண்ணா நானும் பவியுமா சேர்ந்து செஞ்சிடறோம்”
“உன்னை நம்பறேன் என் நம்பிக்கையை கெடுத்துடாத விக்ரம்”
“இல்லைண்ணா சத்தியமா இல்ல”
“சரி நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு கீர்த்தனாவை பார்த்தான்
”பவி எனக்கு தெரிஞ்ச பொண்ணுங்கறதால அவளோட அண்ணன் மேல இருக்கற நம்பிக்கையில இன்டர்வியூ எடுக்காம வேலை கொடுத்துட்டேன் ஆனா நீ அப்படியில்லை. உன்னோட சர்டிபிகேட் கொண்டா மார்க் எப்படி ஏதுன்னு பார்த்து இன்டர்வியூல கேள்வி கேட்டுதான் உன்னை வேலைக்கு சேர்ப்பேன் ஒழுங்கா பதில் சொல்லலைன்னா உனக்கு வேலை கிடைக்காது சரியா”