தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 31 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பைக்கில் இருந்து இறங்கிய ப்ரியா விக்கிராந்திடம்,
“தேங்க்ஸ்...” என்றாள்.
“இட்ஸ் ஓகே’ங்க! எப்போ எந்த ஹெல்ப் வேணும்னாலும் தயங்காமல் ஃபோன் செய்து கேளுங்க,” என்றான் விக்கிராந்த்.
“ஓகே,” என்றாள் ப்ரியா தயக்கம் மின்ன!
“நான் இந்த வீக் என்ட் மதுரை போகலாம்னு இருக்கேன். நீங்களும் வரீங்களா?”
ப்ரியாவின் முகம் ஒரே நொடியின் பேயறைந்தது போல் மாறியது!
ஆனாலும் சமாளித்துக் கொண்டு, “ஹுஹும்ம்...” என சொல்லி தலை ஆட்டினாள்!
“ஏன் ப்ரியா அப்படி சொல்றீங்க? பாவம் பெரியம்மா, இந்த வயசுல அவங்களை நீங்க இப்படி அலைய விடலாமா? அப்பப்போ நீங்களும் அவங்களை போய் பார்க்கலாமே??”
“ஹாங்... ம்ம்ம்... மறந்தே போயிட்டேன் அத்தைக்கு எட்டு மணிக்கு ஃபோன் செய்றேன்னு சொல்லி இருந்தேன். டைம் ஆச்சு, நான் கிளம்புறேன்! பை!”
விக்கிராந்தின் பதிலுக்காகவும் காத்திருக்காமல் வீட்டின் உள்ளே சென்று மறைந்தாள் ப்ரியா!
உறவு என்ற போதும், விக்கிராந்த் ப்ரியாவின் கணவனை சந்தித்ததில்லை! இப்போது ப்ரியாவின் ‘ரியாக்ஷன்’ தெரியாத அந்த மனிதனின் மேல் விக்கிராந்திற்குள் எரிச்சலை ஏற்படுத்தியது!
அவனுடன் வாழ்ந்த இடத்திற்கு சென்றாலே அவனுடைய நினைவு வந்து விடுமா? அதற்காகவா இப்படி சென்னையில் ஒரே வீட்டில் சிறை இருக்கிறாள் இவள்?