என கேட்க அவன் ம் என தலையாட்ட
”நல்லது பவியும் விக்ரமும் வருவாங்க, எனக்கு அவங்க ரெண்டு பேர் மேலயும் சின்னதா குழப்பம் இருக்கு, ஒழுங்கா வேலை செய்வாங்களான்னு தெரியலை, பவி தப்பு பண்ணாலும் விக்ரம் அதை வெளிய காட்டிக்கமாட்டான். நீ என்ன பண்ற அந்த அக்கவுண்ட் பைல்களை கொண்டு போய் கொடு, ஒழுங்கா அவளால கணக்கு பார்க்க முடியுதான்னு பாரு. அவளால முடியலைன்னு உனக்கு சின்னதா உறுத்தல் வந்தாலும் என்கிட்ட சொல்லிடு. அவளை வைச்சி என்னால ரிஸ்க் எடுக்க முடியாது, அப்புறம் கணக்குல தப்பு பண்ணி வைச்சி நான் மாட்டிக்கப் போறேன்” என சொல்ல தாஸின் கவனம் பவியின் பக்கம் சென்றதும் அவன் உடனே தேவாவிடம் நான் பார்த்துக்கறேன் என்பது போல சைகை செய்துவிட்டு அவசரமாக ட்ரான்ஸ்போர்ட் ஆபிஸ் நோக்கிச் சென்றான்.
அதற்குள் மணி 10 ஆகவும் அவனது கதவை யாரோ தட்ட
”உள்ள வாங்க” என கம்பீரமாக அழைத்தான் தேவா. கீர்த்தனா வருவாள் என நினைத்தவனுக்கு பவியும் விக்ரமும் உள்ளே வருவது சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அவர்களிடம்
”வா பவி உட்காரு“ என சொல்ல அவளும் அமர்ந்தாள். விக்ரம் நிற்க
”உட்காருடா”
“இருக்கட்டும்ணா” என சொல்ல தேவா பவியிடம்
”என்னோட ட்ரான்ஸ்போர்ட் வரவு செலவு கணக்குகளை பார்க்கற வேலையை உனக்கும் உன் அண்ணனுக்கும் தரேன். தேவையான கணக்கு பைல்கள் ட்ரான்ஸ்போர்ட் ஆபிஸ்ல இருக்கு, அங்க தாஸ் இருக்கான். அவனை கேட்டா தேவையான பைல்களை எடுத்துத் தருவான் உன்னால செய்ய முடியும்னா சொல்லிடு, முடியாதுன்னா இப்பவே சொல்லிடு வீணா கஷ்டப்பட்டு அந்த வேலையை செய்ய வேணாம்” என சொல்ல அவளோ அவனிடம் நல்ல பெயர் எடுத்து அவனின் மனதில் இடம் பிடிக்க நினைத்து