(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”முத்தம் கொடுக்க சொன்னப்பவும் முடியாதுன்னுட்ட, இப்பவும் முடியாதுங்கற ரெண்டுத்துக்கும் என்ன வித்தியாசம் அப்ப கட்டிப்பிடிக்கறது ஓகேவா முத்தம்தான் தரமாட்டியா” என கேட்க அந்த கேள்விக்கு பதில் சொல்ல தயங்கி அவனை விட்டு விலகி நின்று தலை குனிந்து வெட்கப்பட்டாள். அவளது கை விரல்கள் ஒன்றோடொன்று இறுக்கமாக பிணைத்துக் கொண்டு நின்றவளைப் பார்த்தவன்

   

”சரி ஒரு முத்தம் கொடு” என்றான் அவளோ ம்ஹூம் என மறுப்பாக தலையாட்ட

   

”சரி கட்டிப்பிடி” என சொல்ல அதற்கு மட்டும் அவனிடம் வந்து அவனை கட்டிக் கொண்டு அடுத்த நொடி விலகி நின்றாள்

   

”அவ்ளோதானா”

   

“யாராவது வருவாங்க”

   

“ஓ அப்படியா சரி சரி ம் சரிம்மா இப்ப விசயத்துக்கு வரேன். உனக்கு கன்ஸ்ட்ரக்ஷன்ல எது பிடிக்கும்”

   

“எதுன்னா”

   

“சில பேர் பில்டிங் கட்டறதுக்காக திறமையா ப்ளான் வரைவாங்க, சிலர் வீடு, சிலர் சின்ன சின்ன கட்டிடம், கடைங்க, சிலர் ஓட்டல், மால் போன்ற இடத்திற்கு ப்ளான் வரைவாங்க, உனக்கு எதுல திறமை இருக்குன்னு சொன்னா நல்லாயிருக்கும்”

   

“எனக்கு பொதுவா ம் வந்து என்ன சொல்றது ம் நான் ஹாஸ்டல்ல வளர்ந்திருக்கேன், அங்கயே தங்கியிருக்கேன், நிறைய எனக்கு ஹாஸ்டல் வரைஞ்சி பழக்கம், அதை விட்டா ஸ்கூல், காலேஜ் கூட நான் வரைஞ்சிருக்கேன்”

   

“நான் பெயின்டிங் பத்தி கேட்கலை ப்ளான், ப்ளூபிரின்ட் ப்ளான் பத்திக் கேட்கறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.