“காதல் செய்யலாம்” என தேவா சொல்ல அவள் சிரிப்புடன் அவனிடம் வந்து ஒரு நொடி அவனை அணைக்க அவனோ
”ஏய் நான் இப்ப உன் முதலாளி என்ன செய்ற நீ ஒழுங்கா வேலையைப் பாரு” என அதட்ட அவள் பயந்தாள். அவள் முகம் வாடிவிடவே அதைக் கண்டவன்
”நான் வேலை விசயத்தில ரொம்ப கண்டிப்பு, யாரா இருந்தாலும் இப்படித்தான் என் வீட்ல இருக்கற தாத்தாகிட்ட கூட இப்படித்தான் நடந்துக்குவேன், அதுக்காக உன் மேல எனக்கு வெறுப்புன்னு நினைக்காத. இதுக்குத்தான் நான் சொன்னேன் மதியம் மேல காதல் செய்யலாம், இப்ப நீ நம்ம கம்பெனிக்காக வேலை செய் சரியா”
“ம்” என்றாள் அமைதியாக
”என்னாச்சி கோபமா”
“அப்படியில்லை” என அவள் இழுக்க அவனே அவளைத்தேடி வந்து அவளை இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்து அவள் காதோரம்
”எனக்கும் ஆசை இருக்கு, இருந்தாலும் கட்டுப்படுத்திக்கிறேன். நீ இப்படியே இருந்தா என் கட்டுப்பாட்டை இழந்துடுவேன்” என சொல்ல அவள் அவனை தள்ளிவிட்டுச் சிரித்தாள்
”நான் என்னை கன்ட்ரோல் பண்ணிக்குவேன் நீங்க போங்க நான் ப்ளான் வரையனும்” என சந்தோஷமாகச் சொல்லவும் அவனும்
”ஓகே மிஸ். கீர்த்தனா உங்க வேலையை நீங்க செய்ங்க, என் வேலையை நான் செய்றேன்” என சொல்லிவிட்டு ஒரு சேரை இழுத்து அவளுக்கு நேராக போட்டு அமர அதைப்பார்த்தவள்
”இங்க என்ன செய்றீங்க?”