(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“அது சரி அப்ப தினமும் எனக்கு 2 மணி நேரம்தான் வேலையா”

   

“ஏன் போதுமே நிறைய வேலை செஞ்சா நீ களைச்சிடுவ”

   

“ஆனா நான் இன்னும் ப்ளான் வரையலேயே”

   

“வீட்ல கொண்டு போய் வைச்சி ஹோம் ஒர்க் பண்ணி கொண்டாந்து நாளைக்கு காட்டு”

   

“ஓ அப்படி வர்றீங்களா ஆக என்னால ஆபிஸ்ல வேலை செய்ய முடியாது”

   

“ஏன் முடியாது தினமும் 2 மணி நேரம் செய் அது போதும்” என அவளை இறுக்கமாக அணைக்க அவளோ

   

”ம் விடுங்க இடுப்பை உடைக்காதீங்க யாராவது வருவாங்க”

   

“யாரும் வரமாட்டாங்க”

   

“அண்ணா வருவாரு”

   

“வரமாட்டான் அவனுக்கு நிறைய வேலைங்களை கொடுத்து விரட்டிட்டேன் நீ வா கிட்ட” என அவன் அழைக்க அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.

   

அங்கு தேவனின் வீட்டிலோ பாட்டி கோசலை சரண்யாவுடன் கோயிலுக்குச் சென்று திரும்பி வீடு வந்து சேர்ந்த நேரம் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை, அவரவர்கள் வேலைக்கு சென்றிருந்தார்கள். தாத்தா கூட மூலிகைகளை பறிக்க தோட்டத்திற்குச் சென்றிருந்தார்.

   

அந்நேரம் வீட்டு வாசலில் 7 பேர் அடங்கிய கும்பல் வந்தது. அவர்கள் அனைவருமே அந்த ஊரில் கட்டுமான வேலைகளை செய்பவர்கள், இடைத்தரகர்கள் மற்றும் மேஸ்திரிகள் வாசலில் நின்று கூச்சல் போடவும் பாட்டி வெளியே வந்து அவர்களிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.