(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

அதைப் பார்த்த பாட்டி கோசலையோ

   

”என்னடா பார்க்கற உன் மருமகள்தான், தேவாவை கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கா” என சொல்ல அவளது நிறம், அமைதி, அவளுக்காக வெளியாட்கள் பேசிய விதம் அனைத்தும் சேர்ந்து அவர் அவளைப் பார்த்து சிரித்தார்

   

”உன் பேர் என்னமா” என கேட்க அவளோ

   

”சரண்யா” என்றாள்

   

”நல்ல பேரு” என அவர் சொல்லும் போதே தாய்மாமன் சேதுப்பிள்ளை வந்தார்

   

”என்ன மச்சான் இப்பதான் உங்க மருமகளை பார்க்கறீங்க போல” என சொல்ல அவரும் சிரித்தார். அவர் மனதில் என்னவென்றால் தாயே தேவாவுக்காக ஒரு பெண்ணை பார்த்துவிட்டதாக தவறாக நினைத்துக் கொண்டார்.

   

சேதுப்பிள்ளையோ 

   

”சரி சரி அப்புறம் அந்த ஹாஸ்டல் கட்ட வந்த சென்னைகாரன்கிட்ட டீலிங் பேசனும்னு நினைச்சீங்களே எப்ப மீட்டிங்கனு சொல்லலையே” என கேட்க சரண்யாக்கு திக்கென்றது. அவள் பதட்டமானாள்.

   

”ஆமாம் நேத்துதானே அந்த பையன் வந்தான். இன்னிக்கு நேராவே ஓட்டலுக்கு போய் பேசிடலாம்னு இருக்கேன் நீ வர்றியா”

   

“கண்டிப்பா வரேன், எவ்ளோ பெரிய டீலிங், அந்தாளு ஏடாகூடமா பேசினாலும் சரி நான் நைஸா பேசி டீலிங்கை முடிக்கப் பார்க்கறேன் ஆமா எத்தனை மணிக்குப் போறோம்”

   

“2 மணிக்கு போலாம்”

   

“எதுக்கும் ஒரு முறை அப்பாயின்ட்மென்ட் வாங்கிடலாமா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.