”அவள் உனக்கு வேணாம் விட்டுடு” என சைகை செய்ய அவன் குழம்பி
”ஏன் தாஸ் அப்படி சொல்ற உனக்கு கீர்த்தியை பிடிக்கலையா”
என கேட்க அவனோ
”கீர்த்திக்கு உன்னை பிடிக்காது” என்பது போல் சத்தியம் செய்து சொல்லிவிட்டு அதற்கு மேல் பேச பிடிக்காமல் தேவாவிடம் விக்ரமின் நினைப்பை கட்டாயம் சொல்லிவிட வேண்டும் என்று அவனை தேடி கன்ஸ்ட்ரக்ஷன் ஆபிசுக்குச் சென்றான். விக்ரமோ தாஸ் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவன் ஏதேதோ மனதிற்குள் நினைத்து குழம்பி தவித்துப் போனான்.
”ஏன் தாஸ் இப்படி சொன்னான். அவளுக்கு என்னை பிடிக்காதுன்னு உறுதியா சொல்றான்னா என்ன அர்த்தம், அப்ப அவனுக்கு அவளை பத்தி ஏதோ தெரிஞ்சிருக்கு, இன்னிக்கு நைட் நான் கீர்த்தனாகிட்ட பேசத்தான் போறேன் எப்படியாவது கேட்டுப் பார்க்கனும், நம்ம வீட்ல இருக்கறப்பவே பேசிடறது பெட்டர் என்ன பேசலாம் எப்படி ஆரம்பிக்கலாம்” என மனதிற்குள் ஒரு ப்ளான் போடலானான்.
தாஸோ தேவாவை சுற்றி நடக்கும் பிரச்சனைகளை கண்டு நொந்து போனான்.
ஒருபக்கம் வீட்டில் இருக்கும் சரண்யா
இன்னொரு பக்கம் தேவா விரும்பும் கீர்த்தனா
அடுத்த பக்கம் பவி வேறு தோவாவிற்காக உருகி வழிகிறாள்
இதில் இந்த விக்ரம் வேறு கீர்த்தனாவை கல்யாணம் வரைக்கும் யோசித்துவிட்டான்.
இனி என்ன செய்வது எப்படி பிரச்சனையை சரிசெய்வது என நினைத்துக் கொண்டே கன்ஸ்டர்கஷன் ஆபிஸ்க்கு வந்தவன் கதவை திறந்து உள்ளே அவன் பார்த்த நேரம் தேவா