(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“என்ன” என்பது போல் தாஸ் கேட்க

   

அவன் உடனே தாஸை ஒரு ஓரமாக தள்ளிக் கொண்டு வந்து நிற்க வைத்து

   

”தாஸ் கீர்த்தனா பாவம், அண்ணா எப்படிபட்டவர்ன்னு உனக்கு தெரியும்ல, தப்புன்னா திட்டுவாரு பாவம் அவளால தாங்க முடியாது, நான் பவியை பார்த்துக்கறேன் நீ கீர்த்தனாவை பார்த்துக்கடா ப்ளீஸ்” என சொல்ல அவனோ ஏதோ சைகயை செய்ய

   

”ஓ உனக்கு அவள் மேல என்ன அக்கறைன்னு கேட்கறியா” என கேட்க தாஸ் ஆம் என தலையாட்டவே

   

”என்னவோ தெரியல எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு, பவியை பார்க்க ஹாஸ்டல்க்கு போனப்ப அவளைப் பார்த்தேன். அப்ப அவள் படிச்சிட்டு இருந்தா அப்ப என்னால எதையும் கேட்க முடியலை” என தயங்கிச் சொல்ல அதற்கு தாஸோ என்ன என்பது போல் கேட்க

   

”என்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு கேட்கலாம்னு நினைச்சேன், முடியலை இப்ப அவள் வந்திருக்கா எப்படியாவது அவள் போறதுக்குள்ள நான் அவள் மனசுல இடம் பிடிக்கனும் அதான்” என சொல்ல தாஸ் அதிர்ந்தான், ஒரு நிமிடம் தேவாவும் கீர்த்தனாவும் மரத்தடியில் இருந்த நிலை கண் முன் வரவே அவன் விக்ரமிடம் 

   

இது வேணாம் என பலமாக தலையாட்ட

   

”என்னடா சொல்ற”

   

“லவ் வேணாம்” என்பது போல் அவன் சைகை செய்ய

   

”லவ்வுன்னு சொல்லலை தாஸ், பிடிச்சிருக்குன்னா கல்யாணம் வரைக்கும் பேசலாம்னுதான், பிடிக்கலைன்னா நான்  விட்டுடுவேன்” என கவலையாக அவன் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல தாஸோ விக்ரமிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.