(Reading time: 45 - 89 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”நான் உன்னை சொல்லலை, உன் அண்ணனை சொல்றேன், ஒழுங்கா கல்யாணத்துக்கு சரின்னு சொன்னா ஆச்சி இல்லையா நான் சொன்னதுதான் நடக்கும், சரி வா நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கறேன் சாப்பிட்டு ரெஸ்ட் எடு சாயங்காலமா நீ தேவாகூட கடைக்குப் போலாம் வா வா”

   

“இல்லை பாட்டி நான் சொல்றதை கேளுங்க நான் இங்க வந்தது வேற விசயத்துக்காக” என அவள் சொல்வதைக் கேட்காமல் இழுத்துக் கொண்டு சென்றார் பாட்டி. சரண்யாவாலும் எதுவும் பேச முடியாமல் தவித்தாள்.

   

அங்கு பவியோ வேலை செய்யாமல் விக்ரமை ஒர்க்ஷாப் விரட்டியவள் தன்னுடன் இருந்த மேனேஜரிடம் தேவாவை பற்றியே விசாரிக்கலானாள். அவன் எங்கு எப்போது இருப்பான் என்பது முதல் அனைத்தும், அவரும் விக்ரமின்  தங்கை என்பதால் அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒரு கட்டத்தில் தாஸ் குறுக்கே புகுந்து அவளை எழுப்பி அழைத்துச் சென்று ஒர்க்ஷாப்பில் இருந்த விக்ரமிடம் ஒப்படைத்தான்

   

”என்னடா ஆச்சி, எதுக்கு இவளை கூட்டிட்டு வந்த அவள் வேலை செய்ய வேணாமா” என விக்ரம் கேட்க தாஸோ அவனிடம் அவள் வேலை செய்யவில்லை கதை பேசுவதாகச் சொல்ல விக்ரம் அதிர்ந்தான்

   

”என்னடா சொல்ற” என கேட்க அவனோ

   

”உண்மை” என சைகையில் சொல்ல

   

“சரி சரி இதை அண்ணாகிட்ட சொல்லிடாத, அவள் புதுசுடா அதான் இப்படி விளையாட்டுத்தனமா இருக்கா, நான் அவளுக்கு புரியவைக்கறேன் இப்பவே மதியம் ஆச்சி இதுக்கு மேல வேலையை அவளோட நான் வீட்ல செஞ்சிக்கறேன், அவசரப்பட்டு அண்ணாகிட்ட சொல்லிடாத தாஸ்” என சொல்ல தாஸும் சரியென சொன்னான்.

   

”அப்புறம் தாஸ் எனக்கு ஒரு சின்ன உதவி”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.